வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?

Home Loan Transfer: வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறதா? கவலை வேண்டாம், வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்வது சுலபம்தான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2022, 09:25 AM IST
  • வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறதா
  • வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்வது சுலபம்
  • வீட்டுக் கடனை எப்படி வேறொரு வங்கிக்கு சுலபமாக மாற்றுவது
வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?  title=

ஒரு வங்கியில் இருக்கும் கடனை எப்படி மற்றொரு வங்கிக்கு மாற்றுவது என்பது தெரியாமல், பல வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியில் சேவை குறைப்பாடு இருந்தாலும் சகித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு வங்கியில் இருந்து மற்றொன்றுக்கு கடனை மாற்றுவது ஒன்றும் மிகப்பெரிய விஷயம் இல்லை. உங்கள் வங்கியின் வீட்டுக் கடன் வட்டி அதிகமாக இருந்தாலோ அல்லது வங்கியின் சேவையால் நீங்கள் சிரமப்பட்டாலோ சுலபமாக, உங்கள் வங்கிக் கடனை மாற்றிக்கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானவை.

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது மற்றும் ரெப்போ விகிதத்தை அதிகரித்த பிறகு, பல வங்கிகள் இப்போது தங்கள் கடன் விகிதத்தை அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், வங்கிகளில் வீட்டுக்கடன் விலை உயர்ந்து வருகிறது.

உங்கள் வங்கியில் வாங்கப்பட்ட வீட்டுக் கடனுக்கான வட்டி அதிகமாக இருப்பதாக தெரிந்தால் ஏன் வேறு வங்கிக்கு அதை மாற்றக்கூடாது என்ற எண்ணம் எழுவது இயல்பானதுதான்.பழைய வங்கியிலிருந்து புதிய வங்கிக்கு கடனை மாற்றும் செயல்முறை மிகவும் எளிதானது.

மேலும் படிக்க | Free LPG Cylinder: ரேஷன் கார்டு இருக்கா? இலவச கேஸ் சிலிண்டர் பெறுங்கள் 

கடன் பரிமாற்றம் செய்வது எப்படி?
கடனை எந்த வங்கிக்கு மாற்றலாம் என்பதை முடிவு செய்ய, பல்வேறு வங்கிகளின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை சரிபார்க்கவும். அவற்றில் இருந்து ஒரு வங்கியைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு புதிய வங்கியில் நீங்கள் குறைவான EMI செலுத்த வேண்டியிருக்கும், அது உங்களுக்கு லாபமானதாக இருக்கும்.

கடனை மாற்றுவதற்கு முடிவு எடுத்த பிறகு, பழைய வங்கிக்கு அது தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும். வங்கியின் நடைமுறைகளை தெரிந்துக் கொள்ளவும். பிறகு வங்கியில் இருந்து கணக்கு அறிக்கை மற்றும் சொத்து ஆவணங்களைப் பெற வேண்டும். இதற்குப் பிறகு, இந்த ஆவணங்கள் அனைத்தும் புதிய வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

பழைய வங்கி என்ஓசி கொடுக்கும்
புதிய வங்கிக்கு மாற்றுவதற்கு முன் பழைய வங்கி NOC என்னும் தடையில்லாச் சான்றிதழை வழங்கும். ஒப்புதல் கடிதமும் கொடுக்கப்படும். இந்த கடிதத்தை புதிய வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

வங்கிக் கடன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புதிய வங்கியில் கொடுக்கப்பட வேண்டும். ஒரு புதிய வங்கிக்கு கடனை மாற்ற, நீங்கள் 1 சதவிகிதம் செயலாக்க கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்; எந்த வங்கியில் எவ்வளவு

புதிய வங்கியிடம் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்
KYC 
சொத்து ஆவணம்
கடன் இருப்புத்தொகை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
புதிய வங்கி ஒப்புதல் கடிதம் 

இந்த செயல்முறைகள் அனைத்தும் முடிந்ததும், புதிய வங்கி உங்கள் பழைய வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதத்தை எடுத்து அதன் அடிப்படையில் கடனை முடித்துக் கொள்ளும். புதிய வங்கியுடன் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு புதிய வங்கியுடனான கடன் ஒப்பந்தம் தொடங்கும்.

புதிய வங்கியில் இருந்து பழைய வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு உங்கள் புதிய வங்கியின் மாதாந்திர தவணைத்தொகை அதாவது EMI மாதந்தோறும் செலுத்த வேண்டும்.  

மேலும் படிக்க | இனி நெடுஞ்சாலையில் டோல் கேட் இல்லை! வருகிறது புதிய விதி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News