சனி பகவானின் ராசி மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், தொட்டது துலங்கும்

Sani Peyarchi 2022: சனிப்பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2022, 06:26 PM IST
  • சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
  • தொழிலில் முன்னேற்றமும் வருமானமும் அதிகரிக்கும்.
சனி பகவானின் ராசி மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், தொட்டது துலங்கும்  title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் பாதிக்கின்றது. ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி பகவானின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளது. 

இதுமட்டுமின்றி, சனியின் ராசி மாற்றத்தின் போது ஏற்படும் மாற்றங்களின் விளைவும் நீண்ட காலம் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இம்முறை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சனி பெயர்ச்சியாகப் போகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும், சிலருக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். இந்த சனிப்பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சனி பகவானின் பெயர்ச்சி ஏப்ரல் 29 அன்று நடக்கும்.  இந்த வேளையில் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். அதே நேரத்தில், மீன ராசிக்காரர்களுக்கு அதன் முதல் கட்டம் தொடங்கும். 

சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய பலன்களை அள்ளிக்கொடுக்க உள்ளது என இந்த பதிவில் காணலாம்.

மேஷம்:
சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் அதிக பண வரவு இருக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மேலும், பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் மரியாதை கிடைக்கும்.

மேலும் படிக்க | கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை ஒளிரும், லாபம் பெருகும்

ரிஷபம்:
ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசிக்காரர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும் வருமானமும் அதிகரிக்கும். சனி பகவானின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அள்ளித் தரும். உங்கள் பணியில் நீண்ட நாட்களாக இருந்த தடைகளும் நீங்கும்.

மிதுனம்:
சனி பகவானின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கப் போகிறது. வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. தடைபட்ட பணிகள் நடைபெறும். நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நீண்ட நாட்களாக நோயால் அவதிப்பட்டவர்கள் தற்போது அதிலிருந்து நிவாரணம் பெற்று நிம்மதி அடைவார்கள்.

கன்னி:
சனிப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் சாதகமாக அமையும். தேர்வுகள் அல்லது எதிர்காணல்களில் பங்கு கொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள். வருமானத்திற்கான பல வழிகள் திறக்கும். பணியிடத்தில் ஊதியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். சம்பளம் கூடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி, குபேர யோகத்தால் செழிக்கப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News