Relationship Mistakes: காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து திருமணம் செய்து இருந்தாலும் சரி திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டைகள் வருவது சகஜம் தான். ஆனால் இந்த சண்டையை உடனடியாக பேசி சரி செய்வது நல்லது. அப்போதுதான் இந்த உறவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து இருக்கும். சண்டை வராமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றாலும், ஏதாவது ஒரு சூழ்நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றலாம். இது போன்ற சமயத்தில் மனைவி கணவரிடம் சில விஷயங்களைச் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் இந்த சண்டை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே சண்டைக்குப் பிறகு கணவரிடம் மனைவி சொல்லக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல திட்டமா? விசா தொடர்பான விதிகளில் மாற்றங்கள்!
பழைய தவறை நினைவுபடுத்த வேண்டாம்
மனைவி தன் கணவனுடன் சண்டையிடும் போதெல்லாம், இருவருக்கும் இடையே உள்ள கடந்த கால தவறுகளை நினைவுபடுத்தக்கூடாது. ஏனென்றால் இது இறந்த உடல்களை தோண்டி எடுப்பது போல, முடிந்த சண்டையை மீண்டும் ஆரம்பிக்கும். சண்டை முடிந்து பேசலாம் என்று இருக்கும் கணவருக்கு கூட பேச தோன்றாது. உங்கள் குறிக்கோள் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் நெருப்பில் அதிக எண்ணெயை சேர்க்கக்கூடாது.
அவசரப்பட வேண்டாம்
சில நேரங்களில் நமக்கே தெரியாமல் சண்டையில் மிகவும் தீவிரமாகிவிடுவோம். அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும். கோவத்தில் நாம் பேசும் வார்த்தைகள் சிக்கலை மோசமாக்கும். உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுவது நல்லது. உங்கள் கோபமான கணவரை சமாதானப்படுத்த முயற்சித்தால், அவரது கோபம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் அமைதியாகவிடுவது சண்டையை சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவரும். எனவே இதனை புரிந்துகொள்வதன் மூலம் இந்த சர்ச்சையும் தீர்க்கப்படும்.
சிக்கலைச் சரிசெய்வது போல் நடிக்க வேண்டாம்
உங்கள் கணவருடனான சண்டையை நீங்கள் உண்மையிலேயே தீர்க்க விரும்பினால், அதனை முழு மனதுடன் செய்யுங்கள். எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று மட்டும் காட்டிக் கொள்ளாதீர்கள். இதற்காக போலியான உணர்வுகளை வெளிப்படுத்துவது, கோபத்தை மறைப்பது போன்றவற்றை செய்ய வேண்டாம். தவறு உங்களுடையதாக இருக்கும் பட்சத்தில் தயங்காமல் உடனடியாக மன்னிப்புக் கேட்டு பிரச்சினையை விரைவில் தீர்க்க முயற்சி செய்யவும்.
உறவினர்களைப் பற்றி பேச வேண்டாம்
கணவன்-மனைவி சண்டையில் செய்யும் முதல் தவறு உறவினர்கள் மீது அநாகரீகமாகப் பேசுவது ஆகும். இது பலரது வீடுகளில் அடிக்கடி நடக்கும். இது சண்டையை வழக்குமே தவிர சரி செய்யாது. நீங்கள் உங்கள் கணவரின் உறவினர்களை பற்றி பேசினால் உங்கள் கணவர் உங்கள் பெற்றோரை வசைபாடுவார். பின்னர் இது மாறி மாறி நடிக்க தொடங்கும்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைப்பீங்களா? இந்த விஷயத்தில் கவனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ