ரேஷன் கார்டில் இந்த தவறை செய்திருக்கிறீர்களா? ஒரு நொடியில் ரத்து

ரேஷன் கார்டில் இந்த தவறை நீங்கள் செய்திருந்தால், உங்கள் ரேஷன் கார்டு ஒரு நொடியில் ரத்து செய்யப்படும்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:33 PM IST
  • ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கான அப்டேட்
  • இந்த தவறு செய்தவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும்
  • உடனடியாக தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு
ரேஷன் கார்டில் இந்த தவறை செய்திருக்கிறீர்களா? ஒரு நொடியில் ரத்து  title=

நீங்கள் ரேஷன் கார்டு பயனாளியாக இருந்தால், உங்களுக்கான முக்கியமான செய்தி. மாநில அரசு ரேஷன் கார்டு பட்டியலை அவ்வப்போது புதுப்பித்து வருகிறது. அரசு கொடுத்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றாமல் இருந்தால் அல்லது இந்த தவறை நீங்கள் செய்திருந்தால் உங்கள் ரேஷன் கார்டு நொடியில் ரத்து செய்யப்படும். அந்த அறிவிப்பு என்னவென்றால், நீண்டகாலமாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். 

ரேஷன் கார்டு

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு அரசு ரேஷன் வழங்குகிறது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்கள் மார்ச் 31-க்குள் இதை செய்து முடிக்க வேண்டும்

ரேஷன் கார்டு ரத்து 

ஆனால் அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை நீண்ட காலமாக வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகளையும் அரசு கணக்கெடுத்து வருகிறது. அந்தந்த பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளின் மூலம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் நீண்டகாலமாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் அடையாளம் காணப்படுகின்றன. 

அதன்படி, 6 மாதங்களுக்கு தொடர்ந்து பொருட்கள் வாங்காமல் இருந்தால், அவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் பொருட்கள் தேவையில்லை என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, ரேஷன் பொருட்கள் வாங்க தகுதியற்றவர் எனக் கூறி உங்களின் கார்டு ரத்து செய்யப்படும். இது பொதுவாக டெல்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

மீண்டும் பெறுவது எப்படி?

இந்த விதியின் கீழ் ரத்து செய்யப்படும் ரேஷன் கார்டுகளை மீண்டும் பெற முடியும். உங்கள் மாநிலத்தில் இருக்கும் பொதுவிநியோ வெப்சைட்டுக்கு சென்று, ரத்து செய்யப்பட்டு கார்டுகளை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகளைப் படிக்க வேண்டும். அதனடிப்படையில், ரத்து செய்யப்பட்ட கார்கள் உங்களுக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் வழியாகவே ரேஷன் கார்டுகளுக்கு விண்ணபிக்க முடியும்.

மேலும் படிக்க | அமேசானில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News