பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? இந்த ஆபத்து நேரலாம்!

ஒருவர் பல வங்கிகளில் கணக்குகளைத் திறப்பது சராசரி மாதாந்திர இருப்பு (Minimum Balance) வடிவத்தில் உங்கள் பணத்தை கரைத்துவிடும் என்று கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 6, 2022, 06:34 AM IST
  • வங்கிகள் வழங்கும் சலுகைகளை கருத்திற்கொண்டு பல வங்கி கணக்குகளை திறக்க தொடங்கிவிட்டனர்.
  • இரண்டிற்கும் மேல் வங்கி கணக்கு வைத்திருப்பது தற்போது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.
  • இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? இந்த ஆபத்து நேரலாம்! title=

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அவர்களின் நிதி தேவைக்காகவும் அல்லது அவர்களின் பணத்தின் பாதுகாப்பிற்காகவும் அதிகமாக வங்கியையே நாடுகின்றனர்.  ஒவ்வொரு வங்கியின் வட்டி விகிதம், நம்பகத்தன்மை போன்ற பல சலுகைகளை ஒவ்வொரு வங்கியிடனும் ஒப்பிட்டு பார்த்து மக்கள் முதலீடு செய்கின்றனர்.  அதிகமான வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வங்கிகளும் மக்களுக்கு அதிகளவிலான சலுகைகளையும், பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.  பல்வேறு வங்கிகள் வழங்கும் சலுகைகளை கருத்திற்கொண்டு மக்கள் இப்போதெல்லாம் பல வங்கி கணக்குகளை திறக்க தொடங்கிவிட்டனர், இது தற்போது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.

வங்கிகள் வழங்கக்கூடிய சலுகைகள் மட்டுமின்றி ஒருவர் ஒரு நிறுவனத்தில் வேளைக்கு சேர்ந்த பிறகு அல்லது புதிய வேலைக்கு மாறிய பிறகு அல்லது வேறு சில காரணங்களால் சம்பளம் பெறுவதற்கு வேறொரு புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க நேரிடுகிறது.  அவ்வாறு பல வங்கிகளில் கணக்குகளை திறப்பது நாளைடைவில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.  பல நிறுவனங்கள் ஒவ்வொரு வங்கிகளுடன் டை-அப் வைத்துள்ளன, ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தவுடன், அந்த ஊழியர் தனது சம்பளத்தைப் பெறுவதற்காக அந்த குறிப்பிட்ட நிறுவனம், அது  டை-அப் வைத்துள்ள வங்கியில் கணக்கைத் திறக்க அறிவுறுத்துகிறது.  இவ்வாறு பலரும் வங்கியில் கணக்கை திறக்கும்போது அந்த குறிப்பிட்ட வங்கிக்கு அதிகளவிலான செயலில் உள்ள பயனர்கள் கிடைக்கின்றனர்.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!

அதேசமயம் இதுபோன்று ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு புதிய கணக்கைத் திறப்பது உங்களுக்கு பாதகம் விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  ஏனெனில் இந்த வழியில் நீங்கள் திறக்கும் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, இறுதியில் உங்களுக்கு பொருளாதார சிக்கல்களை உருவாக்கிவிடக்கூடும்.  பல வங்கிக் கணக்குகளைத் திறப்பது சராசரி மாதாந்திர இருப்பு (MB) வடிவத்தில் உங்கள் பணத்தை கரைத்துவிடும்.  எடுத்துக்காட்டாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.10,000 பராமரிக்க வேண்டுமெனில் அந்த பயனர் ஒவ்வொரு கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்.  அப்படி நீங்கள் அந்த தொகையை பராமரிக்காவிட்டால் வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும், இது உங்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தும்.

இதுமட்டுமின்றி  வங்கிக் கணக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக, எவ்வித ட்ரான்ஸாக்ஷனும் செய்யவில்லையெனில், ​​ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி அந்தக் கணக்கு 'டார்மண்ட்' கணக்காகக் கருதப்படும்.  வங்கி கணக்கு டார்மண்ட் செய்யப்பட்டால் அந்த கணக்கின் மூலம் எந்த சலுகைகளையும் பெறமுடியாது மற்றும் அந்த கணக்கை மீட்டெடுக்க வங்கி அபராதம் விதிக்கும்.  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'கூட்டுறவு வங்கிகளையும் உள்ளடக்கிய வங்கிகளின் டார்மண்ட் கணக்குகளில் ரூ. 26,697 கோடி பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது.  பல வங்கிக் கணக்குகளைத் திறப்பது செயலற்ற கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News