கடந்த 1995-ல் இந்தியாவின் கிராமப்புற மக்களுக்காக கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்களுக்கு காப்பீடு வழங்குவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவதும், அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும். பொதுவாக கிராமப்புறங்களில் அஞ்சலகங்கள் தான் மக்களுக்கு நம்பகமான சேமிப்பு இடமாக செயல்பட்டு வருகின்றது. இது அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால் பலரும் இதில் தைரியமாக முதலீடு செய்கின்றனர், கிராமப்புற மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் அஞ்சலகம் வாயிலாக அரசும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அத்தகைய சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு ஆபத்து இல்லாதவை மற்றும் நல்ல வருமானத்தை வழங்குகின்றன. அஞ்சலக திட்டங்களில் தற்போது பிரபலமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம் ஆகும். இது பாலிசி எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசிக்கு மாற்றுவதற்கான கூடுதல் அம்சத்துடன் கூடிய முழு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாகும். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது 19 முதல் 55 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 10,000 முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை பாலிசி எடுக்கலாம், பாலிசி எடுக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இந்த திட்டத்தில் கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் சரண்டர் செய்தால் நீங்கள் போனஸ் பெற தகுதியற்றவர், பாலிசி சரண்டர் செய்யப்பட்டால் , குறைக்கப்பட்ட தொகைக்கு விகிதாசார போனஸ் வழங்கப்படும்.
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.50 தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானத்தைப் பெறலாம். ஒவ்வொரு மாதமும் பாலிசிதாரர் பாலிசியின் கீழ் ரூ.1,515 முதலீடு செய்தால், ஒவ்வொரு நாளும் தோராயமாக ரூ.50 செலுத்தும்பொழுது பாலிசி மதிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், அதன் முதிர்வுக்குப் பிறகு அந்த நபருக்கு ரூ.34.60 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் 55 வருட காலத்திற்கு ரூ.31,60,000 மாஸ்டரும் 58 ஆண்டுகளுக்கு ரூ.33,40,000 மற்றும் 60 வருட காலக் காலத்திற்கு ரூ.34.60 லட்சம் பெறுவார்.
மேலும் படிக்க | இந்த 5 ரூபாய் இருக்கா? 2 லட்ச ரூபாய் பிடிங்க அதிர்ஷ்டசாலி லட்சாதிபதியே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ