இல்லற வாழ்வில் இன்பத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? சுதா மூர்த்தி கொடுக்கும் டிப்ஸ்!

Sudha Murthy Shares Relationship Tips : தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் ஆன சில வருடங்களிலேயே விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதையடுத்து சுதா மூர்த்தி நல்ல இல்லற வாழ்க்கைக்கு சில டிப்ஸ்களை கொடுக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Dec 13, 2024, 04:29 PM IST
  • மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு டிப்ஸ்!
  • சுதா மூர்த்தி சொல்லும் சீக்ரெட்...
  • என்னென்ன தெரியுமா?
இல்லற வாழ்வில் இன்பத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? சுதா மூர்த்தி கொடுக்கும் டிப்ஸ்! title=

Sudha Murthy Shares Relationship Tips : சமூக வலைதளங்களை திறந்தாலே, திரையுலக நடிகர்-நடிகைகள் தங்களின் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட செய்திகள்தான் முன்னாள் வந்து நிற்கிறது. அந்த திருமணம், 1 வருடம் நீடித்ததாக இருந்தாலும் 25 வருடங்கள் நீடித்ததாக இருந்தாலும் அதை பார்க்கும் போதெல்லாம் பலர் மனதுக்கு கஷ்டமாக இருக்கும். இதை தவிர்த்து, நல்ல இல்லற வாழ்வை வாழ, சுதா மூர்த்தி சில டிப்ஸ்களை தெரிவிக்கிறார். 

சுதா மூர்த்தி இந்தியாவின் முக்கிய சமூக ஆர்வலராக திகழ்பவர் ஆவார். இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவியான இவர், இந்தியாவில் இருக்கும் புரட்சி பெண்களுள் ஒருவராக பார்க்கப்படுகிறார். அது மட்டுமன்றி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் இவர், இந்தியர்கள் பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார். சமீபத்தில் அவர் தம்பதிகள் நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொள்ள 5 மந்திரங்களை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா? 

சண்டையை ஏற்றுக்கொள்ளுதல்:

திருமணத்தில் சண்டை சச்சரவுகள் வந்துதான் தீரும், இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்கிறார் சுதா மூர்த்தி. இல்வாழ்க்கையில் இணையும் போதே தம்பதிகள் நமக்குள் சண்டை வரும், மாற்றுக்கருத்துகள் வரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமாம். எந்த தம்பதியாவது, “எங்களுக்குள் சண்டையே வராது” என்று கூறினால், அவர்கள் சரியான கணவன்-மனைவியாக வாழவில்லை என்று கூறுகிறார். இப்படி, இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருப்பது, அந்த உறவை இன்னும் ஒரு படி உயர்த்த உதவுமாம். இந்த புரிந்துணர்வு மன உறுதியை வளர்த்து, அந்த உறவை இன்னும் ஆழமாக புரிய வைக்குமாம். 

கருத்து வேறுபாடுகளின் போது அமைதி காத்தல்: 

சண்டை வரும் போது, விவாதங்கள் எழும் போது அமைதி காப்பது மிகவும் சிறந்தது என்கிறார் சுதா மூர்த்தி. தம்பதிகளுள் ஒருவர் கோபமாக இருக்கும் போது இன்னொருவர் அமைதியாக இருப்பது நல்லதாம். சுதா மூர்த்தி, தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார். அதில், கோபமான விவாதங்களின் போது இவர் அமைதியாகி விடுவதாக கூறியிருக்கிறார். மேலும், ஒருவர் தனது உணர்வை பற்றி பேசும் போது இன்னொருவர் அமைதியாக இருப்பது அவசியமாம். இது, இருவருக்குள்ளும் நல்ல புரிதலை உருவாக்குமாம். 

கொடுக்கல் வாங்கல்:

ஒரு உறவு என்பது, கொடுப்பதாகவும் இருக்க வேண்டும், வாங்குவதாகவும் இருக்க வேண்டும் என்கிறார் சுதா மூர்த்தி. எந்த தம்பதிகளும் அப்படியே சரியான ஜோடிகள் என கூறிவிட முடியாது என கூறும் அவர், ஒரு இல்லற வாழ்க்கையை சரியாக கொண்டு செல்ல, அன்பை கொடுக்கவும் வாங்கவும் இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். இது சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் அவர், இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். 

மேலும் படிக்க | கசப்பான திருமண வாழ்க்கையை இனிப்பாக்கும் 6 சீக்ரெட்ஸ்! என்னென்ன தெரியுமா?

பகிரப்பட்ட பொறுப்புகள்:

வீடு என ஒன்று இருக்கும் போது அதை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் அந்த வீட்டில் இருக்கும் அனைவரது பொறுப்பும் ஆகும். கணவனும் மனைவியும் சமையலறையில் இருந்து படுக்கையறை வரை தங்கள் வீட்டை சரியாக பார்த்துக்கொள்வது இருவருடைய பொறுப்பு என்பதை உணர வேண்டும். இதனால், மகிழ்ச்சி பெருகுவதொடு இருவரும் திருமணத்தில் இருக்கும் சமத்துவத்தையும் புரிந்து கொள்வார்களாம். 

தலைகணத்தை தூக்கியெறிய வேண்டும்:

கணவன்-மனைவி இருவருமே, சண்டைக்கு பின் ஈகோவை அல்லது தற்பெறுமையை தலையில் தூக்கி வைத்து ஆடாமல், விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அப்படி ஈகோ இருவருக்கும் இடையில் வந்துவிட்டால் இருவருமே கடைசியில் தங்களின் திருமண வாழ்வில் ஜெயிக்க முடியாது என்கிறார் சுதா. 

மேலும் படிக்க | திருமண உறவில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News