Petrol, Diesel Price: இன்றைய (ஜூன் 23) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை மட்டுமே நிர்ணயம் செய்வது வழக்கமாக இருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2021, 09:27 AM IST
  • பெட்ரோல் டீசல் விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது
  • தினசரி அடிப்படையில் எரிப்பொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது
  • வரிகளின் அடிப்படையில் மாநிலங்களில் வெவ்வேறாக இருக்கும்
Petrol, Diesel Price: இன்றைய (ஜூன் 23) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் title=

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை மட்டுமே நிர்ணயம் செய்வது வழக்கமாக இருந்தது.

ஆனால் தற்போது இந்தியன் ஆயில்(Indian Oil) , பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலைகளை நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை (Petrol, Diesel Price)  தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Petrol and Diesel: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வாய்ப்பேயில்லை: தமிழக நிதி அமைச்சர்

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளிய்ட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்டோர்ல் 98.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். டீசல் ஒரு லிட்டர் 92.83 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும். 

இந்த விலை நிலவரம் இன்று காலை ஆறு மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எரிபொருள் விலையில் 50 காசுகல் வரை மாற்றங்கள் இருக்கலாம்.

ALSO READ | பெட்ரோல், டீசல் விலை; தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலம்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News