வெளியில் இருந்து காரை பாதுகாக்க மாட்டு சாணத்தை பூசிய பெண்!!

சுட்டெரிக்கும் வெளியில் இருந்து தனது காரை பாதுகாக்க கார் முழுவதும் மாட்டு சாணத்தை அறிவாளி பெண்!! 

Last Updated : May 22, 2019, 02:30 PM IST
வெளியில் இருந்து காரை பாதுகாக்க மாட்டு சாணத்தை பூசிய பெண்!! title=

சுட்டெரிக்கும் வெளியில் இருந்து தனது காரை பாதுகாக்க கார் முழுவதும் மாட்டு சாணத்தை அறிவாளி பெண்!! 

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளியில் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பது மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ள மக்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். மேலும், சிலர் தங்களின் வீட்டை வெயிலுக்கு குளுகுளுப்பாக வைக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு பெண் தந்து காரை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க காரின் வெளிப்புறம் முழுவதும் மாட்டு சாணத்தை கரைத்து கார் முழுவதும் தடவியுள்ளார். அந்த புகைப்படம் சமூகவளைதலத்தில் வைரலாக பரவி வருகிறது. அகதமாபத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் அந்த மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் கௌரங்கா தாஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், முழுவதும் மாட்டுச்சாணம் பூசப்பட்ட கார் ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த காரின் உரிமையாளர் செஜல் ஷா என்ற பெண் என்று தெரிவித்துள்ள ரூபேஷ், மாட்டுச்சாணத்தை இது போன்று யாரும் சிறப்பாக பயன்படுத்தி பார்த்ததில்லை என்று பதிவிட்டுள்ளார். காரின் உரிமையாளரை பலர் கிண்டல் செய்தும், சிலர் பாராட்டியும் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். 

அந்த ஃபேஸ்புக் பதிவில், வெயிலில் இருந்து பாதுகாக்க, சேடான் கார் முழுவதும் மாட்டுச்சாணத்தால் பூசி மொழுகியுள்ளார். 45 டிகிரி செல்சியஸ் அளவிலான வெயிலில் இருந்தும், இந்த சாண கோட்டிங், காரை பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Trending News