ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
2018ம் ஆண்டில் ஆதார் அட்டை (Aadhaar Card) குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்த பின்னர், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கும், பான் அட்டையைப் (PAN Card) பெறுவதற்கும் ஆதார் அடையாள எண் கட்டாயமாகியது. அதன்படி ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான கடைசி தேதியாக மார்ச் 31 அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா 2வது அலை காரணமாக ஜூன் 31 வரை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
ALSO READ | Aadhaar Card Address Update: UIDAI ALERT! உங்கள் முகவரியை இப்படி புதுப்பிக்கவும்
இந்நிலையில் ஆதார்-பான் கார்டுகளை இணைப்பதற்கு 5 நாட்கள் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில், தற்போது இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத அவகாசத்திற்குள் ஆதார்- பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்து விடும் என்பது கவனத்தில்கொள்ள வேண்டியதாகும்.
ஆதார் அட்டை மற்றும் பான் கார்டை ஆன்லைனில் எப்படி இணைப்பது
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் 'Link Aadhaar' பிரிவில் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைத்துவிடலாம். ஏற்கெனவே உங்கள் ஆதாருடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ‘Aadhaar Status' பிரிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஆதார் அட்டை மற்றும் பான் கார்டை ஆஃப்லைனிலும் இணைக்க முடியும்
உங்களிடம் ஆன்லைன் வசதி இல்லையென்றாலும், நீங்கள் எஸ்எம்எஸ் வழியாகவும் இந்த பணியை செய்து விடலாம். இதற்காக, உங்கள் மெசேஜ் பாக்சில், UIDPN என்று டைப் செய்து ஸ்பேசிற்கு பிறகு PAN மற்றும் Aadhaar எண்ணை உள்ளிடவும். இந்த தகவல்களை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும். இதன் பின்னர் உங்கள் பான் ஆதார் உடன் இணைக்கும் பணியைத் துறை தொடங்கும்.
ALSO READ | Aadhaar: ஆதாரின் ‘இந்த’ சேவைகளை பெற இண்டெநெட் தேவையில்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR