உடல் தோற்றத்தை மாற்ற 100-க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்த பெண்....

சுவிஸ்லாந்தை சேர்ந்த பெண் தன்னுடைய உருவத்தை முற்றிலுமாக மாற்ற 100-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யம் அடையவைத்துள்ளது! 

Last Updated : Nov 19, 2018, 05:57 PM IST
உடல் தோற்றத்தை மாற்ற 100-க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்த பெண்.... title=

சுவிஸ்லாந்தை சேர்ந்த பெண் தன்னுடைய உருவத்தை முற்றிலுமாக மாற்ற 100-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யம் அடையவைத்துள்ளது! 

சுவிஸ்லாந்தை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் முற்றிலும் அவரது தோற்றத்தை தன்னம்பிக்கை அதிகரிக்கும் முயற்சியில் பல அறுவைசிகிச்சை மூலம் மாற்றியுள்ளார். குறிப்பாக, அவரது மார்பக உள்ளாடையின் சுற்றளவானது சுமார் 34ff சைஸ் என்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தனது மார்பகத்தின் அளவை அதிகரிக்கவும் இவர் பல்வேறு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் தனது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் “ugly duckling” என்ற ஆஸ்டாக்குடன் பதிவிட்டுள்ளார். மேலும், இவர் அவரது மார்பக சிகிச்சைக்கு மட்டும் $ 50,000 டாலர் செலவு செய்துள்ளது மற்றவர்களுக்கு மாரடைப்பு வரும் அளவிற்கு அதிர்ச்சியாக உள்ளது.   

சூரிச்சிலை சேர்ந்த செலின் செண்டினோ-க்கு தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் 50,000 க்கும் அதிகமான ஆதரவாளர்களையும், 63.6K  பின்பற்றுபவர்களையும் கொடுள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் சுமார் 5 வருடத்தில் கிட்டத்தட்ட 44,000 ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் அறுவை சிகிச்சை மூலம் கன்னம், உதடு, மூக்கு, கண், மார்பகம் மற்றும் இடுப்பு பகுதிகளை இயற்கைக்கு மாறாக முற்றிலுமாக மாற்றியுள்ளார்.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

v  (@ccentino) on

பள்ளி பருவத்தில் இவரது தோற்றமானது அழகற்று இருந்ததாகவும், அவற்றை முற்றிலுமாக மாற்றுவதற்காக இவர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளிப்பருவத்தில் தன்னை பலரும் தனது அசிங்கமான உருவத்தை பார்த்து கேலி செய்து தாக்கப்பட்டதால் அவர் மிகுந்த மனுளைசளுக்கு ஆளானதாகவும், தாக்கு உடல்நிலை சரி இல்லை என பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொல்வாராம். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

= (@ccentino) on

ஆனால், தற்போது இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தன்னிடம் விரும்பாததை மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

addicted 

@ccentino) on

 

Trending News