புதுடெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய சர்ச்சை சமீப காலங்களில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளத்து. சில மாநிலங்கள் இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதே இதற்குக் காரணமாகும். ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேச அரசுகளைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு சத்தீஸ்கர் மாநிலத்திலும் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும். இது நடந்தால், 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் என்ன என்பதையும், இதை ஏன் செயல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம். வரும் ஆண்டுகளில், ஓய்வூதியம் செலுத்துவதற்கான அரசின் சுமையை அகற்றுவதுதான் புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் நோக்கமாக இருந்தது.
இதுவரை, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன. ஏப்ரல் 1, 2004 முதல் நாட்டில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு, புதிய தேசிய ஓய்வூதிய முறை (NPS) அமல்படுத்தப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்கள்:
- பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வசதி
- ஓய்வூதியத்திற்காக சம்பளத்தில் பிடித்தம் இல்லை
-ஓய்வு பெறும்போது நிலையான ஓய்வூதியம் அதாவது கடைசி சம்பளத்தில் 50%-க்கான உத்தரவாதம்
- ஓய்வூதியம் முழுவதும் அரசால் வழங்கப்படுகிறது
- பணியின் போது இறந்தால், சார்ந்திருப்பவருக்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் வேலை கிடைக்கும்.
புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS)
- பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வசதி இல்லை.
- சம்பளத்தில் இருந்து மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
- நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை. இது முற்றிலும் பங்குச் சந்தை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும்.
புதிய ஓய்வூதியம் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், நீங்கள் காப்பீட்டு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
பணவீக்கம் மற்றும் ஊதியக்குழுவின் பலன்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் கிடைக்காது.
மேலும் படிக்க | 7th Pay Commission ஊழியர்களுக்கு ஹோலி பரிசு: ஊதியத்தில் பம்பர் உயர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR