National Youth Day: மேற்கு வங்க மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்..!!

மேற்கு வங்கம், நம் தேசத்திற்கு பல சிந்தனையாளர்களையும், கலைஞர்களையும் வழங்கியுள்ளது. அந்த வகையில், மேற்கு வங்கம் மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 12, 2021, 12:46 PM IST
  • மேற்கு வங்கம், நம் தேசத்திற்கு பல சிந்தனையாளர்களையும், கலைஞர்களையும் வழங்கியுள்ளது.
  • 1893-ம் ஆண்டு சிகாகோவில் உலகச் சமய மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவு இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.
  • காவி உடை அணிந்த அந்த இந்து துறவி ஆற்றிய உரை அங்கிருப்பவர்களை கட்டிப்போட்டது.
National Youth Day: மேற்கு வங்க மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்..!! title=

மேற்கு வங்கம், நம் தேசத்திற்கு பல சிந்தனையாளர்களையும், கலைஞர்களையும் வழங்கியுள்ளது. 

அந்த வகையில், மேற்கு வங்கம் மண்ணில் உதித்த ஞான சூரியனான சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் பரம சீடரான இவர் இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றி இளைஞர்களை ஈர்த்துள்ளார். 1893-ம் ஆண்டு சிகாகோவில் உலகச் சமய மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவு இந்தியாவை (India) திரும்பி பார்க்க வைத்தது. காவி உடை அணிந்த அந்த இந்து துறவி ஆற்றிய உரை அங்கிருப்பவர்களை கட்டிப்போட்டது.  

1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் (Kolkata) விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சுவாமி விவேகானந்தரின் தாய் மொழி வங்காளம். 
 
பள்ளிப்படிப்பிற்கு பிறகு 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்ற பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில்  தத்துவம் பயின்றார். அங்கே மேலைநாட்டு தத்துவங்கள், வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். 
தனது மனதில் தோன்றிய பல கேள்விகளைக்கான விடையை அறிய பகவான் இராமகிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தார் விவேகானந்தர்.

இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. இராமகிருஷ்ணரின் மூலம் பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அமெரிக்காவின்(America) சிகாகோவில் 1893ஆம் ஆண்டு உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து, சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை பரப்பியதோடு. லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

உலக அரங்கில் இந்து மதத்தின் புகழை நிலைநிறுத்திய விவேகானந்தர், 1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை  பயணம் மேற்கொண்டு அவர் ஆற்றிய உரை இளைஞர்களிடயே எழுச்சியை ஏற்படுத்தியது. .

கல்கத்தாவில் இராமகிருஷண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1900ஆம் ஆண்டு டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேலை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

உலகில் இந்து மதத்தின் புகழை பரப்பிய  துறவியான விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் காலமானார். அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் பரவி, அவரது பணியை முன்னெடுத்து செல்கிறது. 

சுவாமி விவேகானந்தர் நமது பாரத பெருமையினை உலகெங்கும் பரப்பிய அந்த ஞானியின் பிறந்தநாளில் தேசம் கம்பீரமாய் அவரை வணங்குகின்றது.

ALSO READ | வெற்றி பெற்றவர் வாழ்க்கை... அப்படியே பின்பற்றலாமா? சத்குரு கூறுவது என்ன..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News