Changing Bank Branch: வீட்டில் இருந்தபடியே வங்கிக் கிளையை மாற்றலாம்..!!

உங்கள் வங்கிக் கிளையை மாற்ற விரும்பினால், இப்போது நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்த எளிய செயல்முறையின் மூலம், வீட்டிலிருந்தபடியே உங்கள் வங்கிக் கிளையை மாற்றலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 1, 2021, 05:47 PM IST
Changing Bank Branch: வீட்டில் இருந்தபடியே வங்கிக் கிளையை மாற்றலாம்..!!  title=

Changing Bank Branch: வேலை அல்லது வணிகத்தில் உள்ளவர்கள் பல நேரங்களில் அவசர வேலை அல்லது இடமாற்றம் காரணமாக இடங்களை மாற்ற வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையை மாற்ற நினைத்தால், இதற்காக நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே வங்கியின் கிளையை எளிதாக மாற்றலாம். அதன் செயல்முறையை அறிந்து கொள்ளலாம்.

வங்கி கிளை மாற்றுவதற்கான செயல்முறை

வங்கிக் கிளையை மாற்றுவதற்கான விதிகள் வங்கிக்கு வங்கி வேறுபடும். நீங்கள் பாரத ஸ்டேட் வங்கி அல்லது பிஎன்பியின் வாடிக்கையாளராக இருந்து, உங்கள் வங்கிக் கணக்கின் கிளையை மாற்ற விரும்பினால், வீட்டில் இருந்தபடியே இந்த வேலையைச் செய்யலாம். இதற்கு உங்களுக்கு ஆன்லைன் பேங்கிங் வசதி இருக்க வேண்டும்.

ALSO READ | நவம்பர் 1ம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள்; முழு விபரம் உள்ளே..!!

எஸ்பிஐ (SBI) வங்கி கிளையை மாற்றுவதற்கான செயல்முறை

1. முதலில் www.onlinesbi.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

2. நீங்கள் இணைய வங்கியைப் பயன்படுத்தினால், பர்சனல் பேங்கிங் ஆப்ஷனுக்கு சென்று உள்நுழையவும்.

3. நீங்கள் ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால், முதலில் உங்கள் ஐடியை பதிவு செய்யவும்.

4. இப்போது 'e-Services' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

5. அடுத்து, சேமிப்புக் கணக்கை வேறு கிளைக்கும் மாற்றும் ஆப்ஷனை டிரான்ஸ்பர் ஆப் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்

6. எஸ்பிஐயில் கணக்கு இருந்தால், மாற்றப்பட வேண்டிய கணக்கு தானாகவே தேர்ந்தெடுக்கப்படும்.

ALSO READ | eSign Aadhaar: ஆதார் மூலம் டிஜிட்டல் கையொப்பம் செய்வது எப்படி..!!

7. இப்போது நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் கிளையின் கிளைக் குறியீட்டை உள்ளிடவும்.

8. பின்னர் Get Branch Name தேர்ந்தெடுத்து புதிய கிளையைத் தேர்ந்தெடுக்கவும்.

8. இப்போது புதிய கிளையின் பெயரை உள்ளிடுவதன் மூலம், அதைச் சமர்ப்பிக்கவும்.

9. சமர்ப்பிக்கப்பட்டதும், உங்கள் வங்கிக் கிளை மாற்றக் கோரிக்கையும் பதிவு செய்யப்படும்.

PNB வங்கி கிளையை மாற்றுவதற்கான செயல்முறை

1. இதில் நீங்கள் Retail Internet Banking மூலம் உள்நுழைய வேண்டும்

2. இதற்குப் பிறகு other services விருப்பத்தை கிளிக் செய்து, Home Branch ஐ மாற்று என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்

3. இப்போது கணக்கு மாற்றப்பட வேண்டிய கிளை ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்

4. கிளை ஐடியை உள்ளிட்ட பிறகு தொடரவும், 

5. பரிவர்த்தனை கடவுச்சொல்லை உள்ளிடவும்.

6. இதன் பிறகு உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்படும்.

ALSO READ | செல்ல மகளுக்காக தினம் ₹416 சேமித்தால் போதும்; ₹65 லட்சம் பெறலாம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News