புதுடில்லி: இப்போது ட்விட்டரில் (Twitter), நீங்கள் "ட்வீட்" செய்வது மட்டுமல்லாமல், இனி ஃப்ளீட் (Fleet) செய்ய முடியும். ட்விட்டர் இந்த புதிய அம்சத்தை தற்போது சோதித்து வருகிறது. முதல் முறையாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சத்தின் சிறப்பு என்ன, அது எவ்வாறு செயல்படும் என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.
"Fleet" என்றால் என்ன?
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப்(WhatsApp) அல்லது ஸ்னாப்சாட் போன்ற வலைதளங்களில் (Social Media) இருப்பதை போன்ற அம்சமாக ஃப்ளீட் (Fleet) இருக்கும். நீங்கள் ட்விட்டர் (Twitter) பக்கத்தில் எந்தவொரு கருத்தையும் பதிவிட்ட ப்`பிறகு, அது அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும். இந்த விருப்பத்தைப் பயன்படுத்த, ட்விட்டரில் உங்களுக்கு தனியாக வசதி வழங்கப்படும்.
மேலும் படிக்க: அட கடவுளே! ட்விட்டர் செயலி மூடப்படுகிறதா? #RIPTwitter டிரெண்டிங்
முதலில் எங்கிருந்து தொடங்கப்படும்:
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அம்சம் முதலில் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் (Twitter) பக்கத்தில் எப்போதும் பயனர்களுக்கு சில சிறந்த அம்சங்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பயனர்கள் போடும் ட்வீட் பக்கத்தில் நிரந்தரமாக இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்திருந்தனர். அதனால்தான் இந்த Fleet அம்சம் கொண்டு வரப்பட்டது. விரைவில் இது உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். இது தவிர, ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் அம்சமும் வழங்கப்படும் எனக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வருகிறது புதிய சட்டம்.. இனி பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்டாக் பயன்படுத்துவது கடினம்
"Fleet" என்ன என்ன அம்சம் இருக்கும்:
நீங்கள் ஒரு "ஃப்ளீட்"டில் சுமார் 280 வார்த்தைகள் வரை எழுதலாம். மேலும் புகைப்படங்களை GIF, JPEG வடிவத்தில் பதிவேற்றலாம். இது தவிர, நீங்கள் பல வடிவங்களில் வீடியோக்களையும் பதிவேற்றலாம். ஆனால் நீங்கள் "ஃப்ளீட்" (Fleet) ஐ மறு ட்வீட் செய்ய முடியாது. உங்களைப் பின்தொடர்பவர்களால் மட்டுமே "ஃப்ளீட்" பார்க்கப்படும். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலவே ட்விட்டர் பக்கத்திலும் "ஃப்ளீட்" காட்சியளிக்கும்.
தற்போது, நிறுவனம் இந்த அம்சத்தை பிரேசிலில் சோதிக்கும். அதன் பிறகு இந்த அம்சத்தை உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளது.