புதுடெல்லி: பணி ஓய்வுக்குப் பிறகு பணப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்று விரும்புகிறீர்களா? அரசாங்க திட்டங்களில் முதலீடு செய்தால், மாதந்தோறும் நிலையான வருமானம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் தங்களது பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், வயதான காலத்தில் அவர்களின் தேவைகள் பூர்த்தியாகும். கவலைகள் இருக்காது.
பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான நேரத்தில் சரியான திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். அதற்காக அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS))
இந்திய தபால் நிலையம் அல்லது பொதுத்துறை வங்கிகள் மூலமாக எஸ்.சி.எஸ்.எஸ். திட்டத்தில் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். தேவைப்பட்டால், அதை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். தற்போது, ஆண்டுக்கு 7.40% என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது.
Also Read | இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்
பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் (Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVYY))
இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கானது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இந்த அரசாங்க திட்டத்தில் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இதில் அதிகபட்சமாக ரூ .15 லட்சம் முதலீடு செய்யலாம். இதில் நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்யலாம். இதில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ .1,44,578 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ .14,45,783. முதலீடு செய்யலாம். முதலீடு செய்த தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான வசதியும் இந்தத் திட்டத்தில் உண்டு.
RBI floating rate bond
15 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டத் தொகையை ரிசர்வ் வங்கியின் இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த பத்திரத்தில் குறைந்தபட்சம் ரூ .1,000 முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. வட்டி தற்போது ஆண்டுக்கு 7.15% என வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு திட்டம் (National Savings Scheme)
தபால் அலுவலக திட்டங்கள் எப்போதும் பாதுகாப்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகின்றன. அஞ்சலக தேசிய சேமிப்பு திட்டத்தில் (National Savings Scheme) முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருவாயைப் பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும் என்பது இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மை. என்.எஸ்.சி திட்டத்தில், ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு முதிர்வு காலத்தில் மட்டுமே திரும்பப் பெறமுடியும்.
Also Read | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த விதிகளில் அனுகூலமான மாற்றங்கள்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR