டிராவல் டெக் நிறுவனமான OYO இந்த புத்தாண்டு தினத்தன்று சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான புக்கிங்கை செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளை கணக்கிட்டு பார்க்கையில் இந்த வருடம் புக்கிங் ஆனது அதிக எண்ணிக்கையில் உள்ளதாக OYO நிறுவனர் மற்றும் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்த பரபரப்பான புத்தாண்டு தினத்தில் கோவாவை காட்டிலும் வாரணாசியில் அதிகமானோர் புக் செய்துள்ளனர். இந்தப் புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 450k+ முன்பதிவுகள் செய்யப்பட்டன, இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகம் என்று ஹோட்டல் நிறுவனர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ 50 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா!
மேலும் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இந்த முறை தான் அதிகளவு முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதை காண்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அகர்வால் ட்வீட் செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு குறிப்பாக பயணம் மற்றும் சுற்றுலாத்துறையில் பெரும் முன்னேற்றம் கண்டது. அந்த வகையில் அதிகளவு வணிக மற்றும் கலாச்சார பயணங்கள் பெரிதளவில் இருந்தது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கோவாவில் முன்பதிவு அதிகரித்து வரும் நிலையில் அதைவிட அதிகமாக வாரணாசியில் முன்பதிவு நடைபெற்றது.
Over 450k+ bookings were made on this New Year's Eve globally. This is 35% more than last year.
We are also seeing the highest bookings per hotel per day for India in the last 5 years today.
#CheckIn2023— Ritesh Agarwal (@riteshagar) December 31, 2022
OYO-ன் டேட்டாக்களை பார்க்கும்போது, 2022ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் தான் மக்களால் அதிகம் பார்வையிடப்பட்ட மாநிலமாக இருக்கிறது. 2021ம் ஆண்டை காட்டிலும் 2022ம் ஆண்டில் ஹத்ராஸ், உத்தரகாண்டில் உள்ள ஸ்ரீநகர், சசரம், காரைக்குடி மற்றும் தெனாலி போன்ற சிறிய நகரங்களில் அதிக முன்பதிவுகள் நடைபெற்றது.
மேலும் படிக்க | உடல் எடை கன்னாபின்னானு ஏறுதா? இதுல கவனம் செலுத்தினா போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ