‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கச்சிதமான உடலமைப்புக்கு இதுதான் காரணமா?

தென்திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாராவின் அழகு மற்றும் இளமையின் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2023, 03:44 PM IST
  • ”லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்கப்படுபவர் நயன்தாரா.
  • உடலை ஃபிட்டாக வைத்திருப்பார்.
  • இவரது அழகு மற்றும் ஃபிட்னஸ் ரகசியம் தெரியுமா?
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கச்சிதமான உடலமைப்புக்கு இதுதான் காரணமா?  title=

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர், நயன்தாரா. தனது திறமைக்காகவும், ரசிகர்களிடம் இவர் வைத்திருக்கும் ஆளுமைக்காகவும் “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்கப்படுகிறார். இவர், தனது முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் சருமத்தை அழகாக பராமரிக்கவும் சில வழிமுறைகளை பின்பற்றுகிறார். அவை என்னென்ன தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

தினமும் வர்க்-அவுட்:

தனது சருமத்தையும் உடலையும் இளமையாக வைத்துக்கொள்ள நயன்தாரா செய்வது என்ன தெரியுமா? தினசரி உடற்பயிற்சிதான். என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், நயனிற்கு யோகா செய்வது மிகவும் பிடிக்கும் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து சொல்லப்படுகிறது. யோகா மற்றும் உடற்பயிற்சிக்காக நயன்தாரா எதையும் தியாகம் செய்ய மாட்டாராம். கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்குவதும் நயன்தாராவின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்று. 

மேலும் படிக்க | நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆயுள் அதிகரிக்குமா..! மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!

யோகா என்றால் மிகவும் பிடிக்குமாம்!

நயன்தாராவிற்கு உடற்பயிற்சி செய்வதை விட மிகவும் பிடித்தது யோகா செய்வது தானாம். யோகா, உடலின் உருவத்தையும் எடையையும் பராமரிக்க உதவும் என்பதில் ஐயமில்லை. இதனால்தான், நயன்தாராவும் யோகாவை கடைப்பிடிக்கிறாராம். இதற்காக அவர், ஒரு பர்சனல் ட்ரைனரையும் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவரைப்பொருத்த வரை, யோகா என்பது வலிமையான உடலை மட்டுமல்ல மன தைரியத்தையும் கொடுக்கும் என நம்புகிறார். யோகா நமது மன நலனையும் உடல் நலனையும் சரிசமமாக பார்த்துக்கொள்ளும் என நம்புகிறர், நயன். 

நயன்தாராவின் டயட் இதுதானா?

நயன்தாரா, யோகா மற்றும் உடற்பயிர்சியை தவிர டயட்டையும் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது. பிற பிரபலங்களைப்போல, இவர் எந்த சமூக வலைதங்களிலும் ஆக்டிவ் ஆக இல்லை. இதனால், இவர் குறித்த பல விஷயங்கள் மக்களுக்கு தெரியாமலேயே போய் விடுகின்றன. இவர், சில சமயங்களில் காய்கறி டயட்டில் இருப்பதாகவும் சில சமயங்களில் பழங்களின் டயட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறைவாக சாப்பிட்டு அதிகமாக உடற்பயிற்சி செய்வதை தனது வாழ்க்கை மந்திரமாக கொண்டுள்ளாராம் நயன்தாரா. இது மட்டுமன்றி, இளநீர் மற்றும் முட்டை சப்பிடுவதும் நயன்தாராவின் உணவு பழக்கங்களில் ஒன்றாம். சில நேர்காணல்களில் அவர், “எல்லரையும் போல்தான் சாப்பிடுவேன். எனது அழகு கடவும் எனக்கு கொடுத்த பரிசு..” என்றும் அவர் குறிப்பிடுவதுண்டு. 

உடல் எடையை குறைக்க..

கஜினி, ஐயா, சந்திரமுகி, சிவகாசி போன்ற படங்களில் நடிக்கும் போது நயன்தாரா, இப்போது இருப்பதை விட உடல் எடை அதிகமாக இருந்தார். அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது  எடையை அவர் குறைத்துக்கொண்டார். இப்போதும் தனது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கும் உடலை ஃபிட்டாக வைப்பதற்கும் நயன், அடிக்கடி ஜிம்மிற்கு செல்வதுண்டாம். 

சருமத்தை பளபளப்பாக்க..

நயன்தாராவிற்கு அவரின் அழகை இன்னும் கூட்டி கொடுப்பது, அவரது பொலிவான முகமும் பளபளப்பான சருமமும்தான். இவர் நடிகையாக இருந்தாலும் சமயங்களில் அவர் வெயிலில் ஷூட் செய்ய வேண்டி இருக்கும். வெயிலில் இருந்து தனது சருமத்தினை பாதுகாத்துக்கொள்ள அவர் சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவது வழக்கம் என கூறப்படுகிறது. சருமத்தை காய் விடாமல் இருப்பதற்காக, நயன் இன்னும் சில இயற்கை பொருட்களையும் உபயோகப்படுத்துகிறாராம். தண்ணீர் குடிப்பது நமது உடல் உறுப்புகளை மட்டுமல்ல முகத்தையும் பளபளப்பாக்கும். இதனால், அதிகம் தண்ணீர் பருகுவதையும் நயன் வழக்கமாக்கிக்கொண்டுள்ளார். 

மேக்-அப் டிப்ஸ்:

நயன்தாரா பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கையில், Non-Makeup லுக்கில் செல்வது வழக்கம். இவருக்கு கண்களில் மேக்-அப் போடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால், தனது கண்களில் மஸ்காரா போடுவஹு, ஐலேஷ் ஒட்டுவது, என அனைத்தையும் செய்வாராம். நயன்தாராவின் புருவங்களை கவனித்ததுண்டா? அவை முகவும் அடர்த்தியாகவும் வில் போல வலைந்து இருக்கும். இதையும் கவனமாக பராமரித்து வருகிறார், நயன். இதற்காக இவர் சில ஆயுர்வேத எண்ணெய்கள் உபயோகிப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சமந்தா போல உடலை Fit -ஆக வைத்துக்கொள்வது எப்படி? ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News