நவராத்திரி பண்டிகை 9 ஆம் நாள் சரஸ்வதி பூஜை சிறப்பு வழிப்பாடு விவரம்: நவராத்திரியின் ஒன்பாதவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை என்றும் சொல்லப்படும் இந்த பூஜையை அதிகாலை செய்வதே சிறந்தது. நவராத்திரியின் 9 நாட்களும் விரதமிருந்து பூஜித்து வழிபட்டு அன்னையிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் இறுதி நாளாகிய சரஸ்வதி பூஜையை செய்தால் பூர்த்தியடையும். சரஸ்வதி தேவியை வழிபடுகிற நிறைவு நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. பரமனின் நாயகி, பரமனின் ஈஸ்வரி என்பதனால் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்கிறோம். இந்த அம்பிகை தைரியம், வீரம், ஆற்றல் போன்ற அத்தனையையும் நமக்கு அருளக் கூடியவளாக இந்த தேவி அமைகிறாள்.
நவராத்திரி பண்டிகை ஒன்பதாம் நாள் 2023:
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். ஒன்பது நாளும் ஒன்பது வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள்.
நவராத்திரியின் ஒன்பது நாட்கள்:
நவராத்திரியின் (Navaratri 2023) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.
மேலும் படிக்க | சனிக்கிழமையில் ‘இதை’ மட்டும் செய்யவே கூடாது..! மீறினால் துரதிர்ஷ்டம் கன்ஃபார்ம்..!
சரஸ்வதி பூஜை 2023:
ஒன்பதாம் நாள் நவமி திதியில் ஆயுதங்களுக்கு பூஜை செய்து, தசமி திதியில் அம்பாளின் வெற்றியை கொண்டாட வேண்டும். 2023 ஆம் ஆண்டில் அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 23 ஆம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி நவமி திதியன்று ஆயுத பூஜையும் (Ayudha Puja 2023 Date and Time), அக்டோபர் 24 ஆம் தேதி தசமி திதியில் விஜயதசமியும் கொண்டாடுகிறோம்.
ஆயுத பூஜை கொண்டாடும் முறை:
ஆயுத பூஜையன்று தொழில் மற்றும் கல்விக்கான ஆயுதங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள், சந்தனம் கலந்து பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி, கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை முதன்மைபடுத்தி வழிபடுகிறோம். ஆனால் ஆயுத பூஜையன்று மூன்று தேவியர்களையும் மையப்படுத்தி வழிபாடு நடத்த வேண்டும்.
பூஜை செய்ய ஏற்ற நேரம்:
அக்டோபர் 23 ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 7:15க்குள் ஆயுதங்களுக்கு பூஜை செய்யலாம்.
நவராத்திரி பூஜை ஒன்பதாம் நாள்:
அம்பாள்: சரஸ்வதி தேவியை அலங்கரித்து வழிபட வேண்டும்.
கோலம்: வாசனை பொடிகளால் ஆயுதம் போல பத்ம கோலமிட வேண்டும்.
மலர்கள்: தாமரை பூ அர்ச்சனை செய்ய வேண்டும்.
பாட வேண்டிய ராகம் வசந்தா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ