நலம் தரும் நரசிம்ம ஜெயந்தி: பூஜை நேரம், விரத நடைமுறை என்ன

இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி மே 14 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் சதுர்த்தசி திதி மே 14 அன்று பிற்பகல் 3:22 முதல் மே 15 மதியம் 12:45 வரை உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 14, 2022, 08:28 AM IST
  • நரசிம்ம ஜெயந்தி 2022 எப்போது
  • நரசிம்மர் ஜெயந்தி விரதம்
  • நரசிம்ம ஜெயந்தி 2022 பூஜை நேரம்
நலம் தரும் நரசிம்ம ஜெயந்தி: பூஜை நேரம், விரத நடைமுறை என்ன title=

ஸ்ரீ ஹரி விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர், நரசிம்ம ஜெயந்தியின் போது வழிபடப்படுகிறார். நரசிம்மரை வழிபடுவதால் பயம், துக்கம் முதலியன தீர்ந்து பகைவர்களிடம் வெற்றி கிடைக்கும். இந்த பெயரை குறிப்பிடும்போது, மனிதன் (நர) மற்றும் சிங்கம் (சிம்ஹா) ஆகியவற்றின் கலவையாக நரசிம்மர் உள்ளார். இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் நரசிம்ம அவதாரம். மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் நரசிம்ம அவதாரம் தான்.

நரசிம்ம ஜெயந்தி 2022 எப்போது?
ஹிரண்யகசிபு என்கிற அரக்கனுக்கு பிரம்மாவின் வரத்தை மறுக்க விஷ்ணு பகவான் நரசிம்மர் அவதாரத்தை எடுத்தார். இதை அனுசரிக்கும் விதமாக நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி மே 14 ஆம் தேதியான இன்று கொண்டாட உள்ளது. அதன்படி, நரசிம்ம ஜெயந்தி மே 14 அன்று பிற்பகல் 3:22 முதல் மே 15 மதியம் 12:45 வரை உள்ளது. 

மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் 

நரசிம்மர் ஜெயந்தி விரதம்
இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழுவதும் நரசிம்மரின் நினைவுடன் ஆராதித்து வழிபட்டு, பூஜை, புனஸ்காரம் செய்து வழிபட்டு விரதத்தை முடிப்பது நல்லது. ஏனெனில் இந்த அந்திமாலை பொழுதில் தான் நரசிம்மர் அவதரித்தார் என்கிறது புராணங்கள். நரசிம்மருக்கு சர்க்கரை பொங்கலும், பானகம் மற்றும் அவரை குளுமையாக்கும் வகையில் சில குளுமையான பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக சிறந்தது. 

உங்களிடம் நரசிம்மரின் புகைப்படம் அல்லது சிலை இல்லையென்றால், விஷ்ணுவின் புகைப்படம் அல்லது சிலை மூலம் பூஜை செய்யலாம். இறைவனின் சிலை அல்லது படத்திற்கு குங்குமம், சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். ஒரு மண், வெள்ளி அல்லது பித்தளை விளக்கு ஏற்றி வைக்கவும். உங்கள் பிரார்த்தனைகளையும் பிரசாதங்களையும் ஏற்றுக்கொள்ள நரசிம்ம பகவானை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளுக்கு பூக்கள், மற்றும் தானியங்கள் வழங்குங்கள். ஊதுபத்தி ஏற்றவும். இந்த நாளில் நீங்கள் ஏழைகளுக்கு உணவு தானம் செய்யலாம். மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான சிறந்த வழி அன்னாதனம்.

நரசிம்ம ஜெயந்தி 2022: பூஜை நேரம்
இந்த ஆண்டு, நரசிம்மரை வழிபட உகந்த நேரம் மே 14 மாலை 04:22 முதல் 07:04 வரை ஆகும்.

நரசிம்மர் மூல மந்திரம்
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,
ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,
பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களையும், துளசி பயன்படுத்தி நரசிம்மரை அர்ச்சனை செய்து வணங்குவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2025 வரை ஏழரை நாட்டு சனியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கப் போகும் ராசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News