Name Astrology: இந்த '5' எழுத்துகள் உங்கள் பெயரில் உள்ளதா? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்க

ஜோதிடம் மூலம் நம் வாழ்க்கை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை கணிக்க முடியும். அதோடு சில பெயர்கள் மாற்றமும் அதிர்ஷ்டத்தைத் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 11, 2022, 06:34 PM IST
  • ஜோதிடத்தில் ஒரு நபரின் விதி பெயரின் முதல் எழுத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது
  • 'A' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்
  • 'H' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் சிறந்த தலைவராக இருப்பார்கள்
Name Astrology: இந்த '5' எழுத்துகள் உங்கள் பெயரில் உள்ளதா? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்க title=

ஜோதிடத்தின் படி சில எழுத்துக்கள் மிகவும் செல்வத்தை அளிக்கக் கொடுக்கும். அத்தகைய எழுத்து உங்கள் பெயரில் இருந்தால், நீங்கள் வெற்றியையும் செல்வத்தையும் அடிக்கடி அனுபவிப்பீர்கள் என்று கூறலாம். ஜோதிடத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை கணிக்க முடியும். அதோடு சில பெயர்கள் மாற்றமும் அதிர்ஷ்டத்தைத் தரும். 

ஜோதிடத்தில் ஒரு நபரின் விதி பெயரின் முதல் எழுத்தில் இருந்து நிகழ்கிறது என்று கூறப்படுகிறது. பெயரை மாற்றிக் கொண்டு ஒரே இரவில் பிரபலமடைந்தவர்களும் உண்டு.

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

'A' என்ற எழுத்து உள்ள பெயர்கள்: 'A' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். இவர்கள் சிறுவயது முதலே கடின உழைப்பாளிகள் மற்றும் திறமையானவர்கள் ஆவார்கள்.

'c' என்ற எழுத்து உள்ள பெயர்கள்: 'c' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் பல சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் ஆவார்கள். வெற்றி அவர்களுக்கு திடீரென்று எங்கிருந்தாவது தேடி வரும்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

'H' எழுத்துப் பெயர்கள்: 'H' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் பெரிய தலைவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் குறுகிய காலத்தில் வளரும் திறன் கொண்டவர்கள்.

'K' என்ற எழுத்தில் உள்ள பெயர்கள்: 'K' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை உடையவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள் ஆவார்கள்.

'S' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்: ' S ' எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் நேர்மறையாக இருப்பார்கள். அவர்கள் நல்ல அரசியல்வாதிகள் மற்றும் பேச்சாளர்கள் ஆவார்கள். குறைந்த நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் திறன் இவர்களுக்கு உண்டு.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News