மஹாசிவராத்திரி நாளில் சிவபெருமானை முழு பக்தியுடனும் சடங்குகளுடனும் வழிபட்டால், சிவ பெருமான மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என அனைத்தையும் தருகிறார்.
பூஜையின் நீங்கள் அணியும் ஆடைகளின் நிறமும் ஆன்மீக நம்பிக்கையுடன் தொடர்புடையது. மகாசிவராத்திரியான மார்ச் 1 ஆம் தேதி அன்று அனைத்து பக்தர்களும் சிவபெருமானின் அருளை முழுமையாக பெற பூஜைகளும் ஆராதனைகளும், அபிஷேகங்களையும் நடத்துவார்கள். இதனால் சிவபெருமானும் மகிழ்ச்சி அடைந்து அருளைப்பொழிகிறார்.
இந்நிலையில், மகா சிவராத்திரி நாளில் மக்கள் கோயிலுக்குச் சென்று சென்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சிவனை வழிபடும் நேரத்தில் அவருக்கு பிடித்த சிறப்பு வண்ண ஆடைகளை அணிந்தால் அனைத்து மன விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. எனவே இந்த சிவராத்திரியில் எந்தெந்த வண்ண ஆடைகள் உங்கள் வழிபாட்டை வெற்றியடையச் செய்யும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2022: சிவனின் அருளை முழுமையாக பெற செய்ய வேண்டியவை..!!
வெள்ளை மற்றும் பச்சை நிற ஆடைகள்
சிவபெருமானை வழிபடும் போது பச்சை நிற ஆடைகளை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகின்றன. பச்சை நிறத்தைத் தவிர, வெள்ளை நிற ஆடைகளையும் அணியலாம். சிவபெருமானுக்கு வெள்ளை மற்றும் பச்சை நிறங்களை மிகவும் பிடித்தமானது என்று நம்பப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் பூக்களும், வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். எனவே சிவராத்திரி அன்று பச்சை மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தால் அதிக பலன் கிடைக்கும்.
இந்த நிறங்களின் ஆடைகளும் மங்களகரமானவை
உங்களிடம் பச்சை அல்லது வெள்ளை ஆடைகள் இல்லாமலோ அல்லது சில காரணங்களால் இந்த நாளில் இந்த வண்ணங்களை அணிய முடியாமலோ இருந்தால், நீங்கள் சிவப்பு, குங்குமம், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் காவி நிற ஆடைகளை அணிந்து கொண்டு சிவ பெருமானை வணங்கலாம்.
மேலும் படிக்க | ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்
கருப்பு நிற ஆடைகளை தவிர்க்கவும்
சிவபெருமானுக்கு கருப்பு நிறம் அத்தனை உசிதமானது அல்ல. எனவே சிவராத்திரியில் கருப்பு நிற ஆடைகளை தவிர்க்கவும். பொதுவாக, சிவனுக்கு பிடித்தமான இந்த குறிப்பிட்ட வண்ணங்களின் ஆடைகளை அணிவது உங்கள் பூஜையை வெற்றிகரமாக்கும்.
மேலும் படிக்க | வெற்றியை அள்ளித் தரும் திங்கட்கிழமை பரிகாரங்கள்..!!
மஹாசிவராத்திரி தினத்தன்று ருத்ராபிஷேகம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், நோய்கள், துக்கங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. சிவன் அருளால் மிகுந்த மகிழ்ச்சி, செழிப்பு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை ஆகியவை அமையும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR