கொரோனாவில் இருந்து பாதுகாக்க முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மதுரை ஹோட்டலில் மாஸ்க் புரோட்டாவை அறிமுகம்...!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முகமூடி அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பிட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற பல்வேறு நடவடிக்கைகளை கடாய் பிடித்து வருகிறோம். இந்நிலையில், கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் உள்ள உணவகத்தில் மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை, கொரோனா போண்டா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது.
பரோட்டாவிற்கு பெயர் போன மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இவை தயாரிக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் பரோட்டா, கொரோனா வைரஸ் வடிவிலான ரவா தோசை, கொரோனா வடிவிலான வெங்காய போண்டாவும் விற்பனை செய்யப்படுகிறது.
READ | COVID-19 காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் பெருகி வருகிறது: WHO
இதனை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதேபோன்று எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க வாடிக்கையாளர்களுக்கு மூலிகை ரசமும், கபசூரகுடிநீரும் வழங்கப்படுகிறது. மாஸ்க் பரோட்டா 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா காலத்திலும் தங்களது முத்திரையை பதித்திருக்கின்றனர் மதுரை மக்கள் அன்பதில் சந்தேகமே இல்லை.