எல்பிஜி மானியம்: எல்பிஜி சிலிண்டர் மானியம் குறித்து வாடிக்கையாளர்கள் ஒரு பெரிய செய்தியை பெறக்கூடும். உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், எல்பிஜி சிலிண்டர் விலை 1000ஐ எட்டும் என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
அதிகரித்து வரும் எல்பிஜி சிலிண்டர்-களின் விலை குறித்து அரசின் கருத்துகள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அரசாங்கத்தின் உள் மதிப்பீட்டில், நுகர்வோர் ஒரு சிலிண்டருக்கு 1000 ரூபாய் வரை செலுத்தத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, எல்பிஜி சிலிண்டர்கள் தொடர்பாக அரசாங்கம் இரண்டு நிலைப்பாடுகளை எடுக்கக்கூடும். முதலில், மானியம் இல்லாமல் சிலிண்டர்களை அரசு வழங்கலாம். இரண்டாவதாக, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோருக்கு மானியத்தின் பலன் வழங்கப்படலாம்.
மேலும் படிக்க | இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் முறையில் எல்பிஜி சிலிண்டர்களை புக் செய்வது எப்படி?
மானியம் குறித்த அரசின் திட்டம் என்ன?
மானியம் வழங்குவது குறித்து அரசு தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதுவரை கிடைத்த தகவலின்படி ரூ.10 லட்சம் வருமானம் என்ற விதி அமலில் இருக்கும் என்றும், உஜ்வலா திட்டத்தின் பயனாளிகள் மானியத்தின் பலனைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மக்களுக்கு மானியம் முடிவடையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மானியத்துக்காக அதிகம் செலவிடுகிறது
கடந்த பல மாதங்களாக எல்பிஜி-க்கான மானியம் வரத் தொடங்கியுள்ளது. 2021 நிதியாண்டில் மானியங்களுக்கான அரசாங்கத்தின் செலவு ரூ.3,559 ஆக இருந்தது. 2020 நிதியாண்டில், இந்த செலவு ரூ.24,468 கோடியாக இருந்தது. இது ஜனவரி 2015 இல் தொடங்கப்பட்ட டிபிடி திட்டத்தின் கீழ் உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் மானியம் இல்லாமல் எல்பிஜி சிலிண்டரின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.
மானியத் தொகையானது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் அரசாங்கத்தால் திரும்ப அனுப்பப்படுகின்றது. இந்த ரீஃபண்ட் நேரடியாக இருப்பதால், இந்தத் திட்டத்திற்கு DBTL என்று பெயரிடப்பட்டுள்ளது.
விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
காஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, அதாவது 2021ம் ஆண்டு முதல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் புத்தாண்டில் வீட்டு உபயோக எரிவாயு விலையில் இதுவரை எந்த புதுப்பிப்பும் இல்லை.
மேலும் படிக்க | LPG சிலிண்டர் விலை உயர்வு, மக்கள் வயிற்றில் மீண்டும் அடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR