கேஸ் சிலிண்டரை பெறுவது இனி ஈசி; ஒரு Missed Call போதும்

எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வது இனி மிகவும் ஈசி. ஆம் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2021, 04:17 PM IST
கேஸ் சிலிண்டரை பெறுவது இனி ஈசி; ஒரு Missed Call போதும் title=

புதுடெல்லி: LPG Booking: எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும். LPG ஐ முன்பதிவு செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆம் வாடிக்கையாளர்கள் மொபைலில் இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்.  உண்மையில், இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது.

மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்
இதன் கீழ், மிஸ்டு கால் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்கள் எல்பிஜி சிலிண்டரை (LPG Cylinders) முன்பதிவு செய்யலாம். இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே மிஸ்டு கால் மூலம் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை IOC தொடங்கியது.

ALSO READ | ஆதார் அட்டையை மட்டும் காட்டி நிமிடங்களில் எல்.பி.ஜி இணைப்பு பெறலாம்c

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். எல்பிஜி கேஸ் சிலிண்டர் உங்கள் வீட்டு வாசல் தேடி வரும் என்று தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழியிலும் LPG சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்
மிஸ்டு கால் தவிர, கேஸ் புக்கிங் செய்ய வேறு வழிகள் உள்ளன. IOC, HPCL மற்றும் BPCL வாடிக்கையாளர்கள் SMS மற்றும் Whatsapp மூலமாகவும் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.

IOC வாடிக்கையாளர்கள் இதுபோன்று சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்
நீங்கள் Indane வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7718955555 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் LPG எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். மற்றொரு வழி Whatsapp, REFILL என்று எழுதி 7588888824 என்ற எண்ணில் Whatsapp செய்யலாம். இதன் மூலம் கேஸ் சிலிண்டர் உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும்.

ALSO READ | LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News