புதுடெல்லி: பெட்ரோலிய நிறுவனங்கள் வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை 43 ரூபாய் உயர்த்தியுள்ளன. டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இப்போது ஒரு பாட்டில் ரூ. 1736.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 1 ஆம் தேதி, வணிக எல்பிஜி சிலிண்டர் (LPG cylinders) சிலிண்டரின் விலை ரூ .75 உயர்த்தப்பட்டது. புதிய ஆர்டர் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
"பெட்ரோலிய நிறுவனங்கள் வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை 43 ரூபாய் உயர்த்தின. டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இப்போது ரூ. 1736.50. செப்டம்பர் 1 ஆம் தேதி, வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்த்தப்பட்டது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை” என ANI தெரிவித்துள்ளது.
Petroleum companies increase price of commercial LPG cylinders by Rs 43. Price of a 19 kg commercial cylinder in Delhi now Rs 1736.50. On Sept 1st, price of commercial LPG cylinder was increased by Rs 75. New rates effective from today. No change in domestic LPG cylinder rates.
— ANI (@ANI) October 1, 2021
ALSO READ: LPG Subsidy: சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?
செப்டம்பரில், எல்பிஜி சிலிண்டர் சமையல் எரிவாயு விலை முந்தைய விலையான 859.5 ரூபாயிலிருந்து ஒரு பாட்டிலுக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. 14.2 கிலோ மானியம் கொண்ட மற்றும் மானியம் இல்லாத எல்பிஜி (LPG) சிலிண்டர் தேசிய தலைநகர் டெல்லியிலும் மும்பையிலும் இப்போது 884.50 ரூபாயாகும்.
கொல்கத்தாவில் 14.2 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 911 ஆகவும், சென்னையில் (Chennai) எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ. 900.5 ஆகவும் இருக்கும்.
ALSO READ: Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR