வாழ்க்கை என்பது எதிர்பாராத நிகழ்வுகளால் நிரம்பியது. அனைத்துமே தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது என்று சொல்வது ஒருவகையில் உண்மையானது தான். எவ்வளவு திட்டமிட்டு செயல்பட்டாலும், எதிர்பாராத நிகழ்வுகள் நமது வாழ்க்கையை புரட்டிப் போடலாம். அந்த புரட்டல், உச்சாணிக் கொம்பில் வைத்து அழகு பார்ப்பதாகவும் இருக்கலாம், கோடீஸ்வரரை குப்பை மேட்டிற்குத் தள்ளிவிடுவதாகவும் இருக்கலாம்.
அதிலும், எதிர்பாராத விபத்து, மரணம் ஆகியவை வாழ்க்கையை நிலைகுலைத்துவிடும். மரணம் எப்போது யாருக்கு வரும் என்று தெரியாத நிலையில் அதை தவிர்க்கவும் முடியாது என்பது கசப்பான உண்மை. எனவே எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
ஆபத்துகள் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் அனுமானத்திற்கு உட்பட்டவைத் தானே. அதன் அடிப்படையில் தான் ஆயுள் காப்பீடு (Insurance) புத்திசாலித்தனமான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே காப்பீடு என்பது எதிர்பாராத ஆபத்தை, நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் காப்பீடு செய்யும்போது, எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும். பாலிசியை வாங்கும் போது, சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
பாலிசி வகை
எந்தவிதமான பாலிசி எடுப்பது என்பதை முதலில் முடிவு செய்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், ஆயுள் காப்பீடுகளில், தற்போது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பாலிசி (Unit Linked Insurance Policy (ULIP)) அதிகமாக வாங்கப்படும் சூழல் உள்ளது. யூலிப் பாலிசி வாங்கினால், அவற்றின் கட்டணங்கள், வெவ்வேறு ஃபண்ட் ஆப்ஷன்கள், ஃபண்ட் ஸ்விட்சிங் தொடர்பான விளக்கங்களை கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆயுள் காப்பீடு பாலிசி வகைகள்
ஆயுள் காப்பீட்டில், எண்டோவ்மெண்ட் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் என இரு வகைகள் உள்ளன. முதல் வகையில் உங்கள் பாலிசி காலம் முடிவடைந்ததும், உங்கள் பாலிசித் தொகையுடன், போனஸ் தொகையும் சேர்த்து உங்களுக்குத் திருப்பிக் கிடைக்கும். பாலிசி காலத்திற்குள் பாலிசிதாரர் இறந்துவிட்டால், காப்பீட்டுத்தொகை மற்றும் போனஸ் இரண்டும் சேர்த்து நாமினிக்கு கொடுக்கப்படும்.
இதுவே, டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால், அது மருத்துவ காப்பீடு போன்றே இருக்கும். அதாவது, பாலிசி காலம் முடியும்போது, பணம் எதுவும் கிடைக்காது, பாலிசி காலத்திற்கு முன்னதாக பாலிசிதாரர் இறந்தால், காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். எனவே, எந்த பாலிசி எடுக்கிறோம் என்பதை புரிந்துக் கொண்டு முடிவெடுத்து படிவத்தை நிரப்பவும்.
படிவத்தை நிரப்புவது
எந்த இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது என்பதை முடிவு செய்த பிறகு, அதற்கான படிவத்தை நிரப்பும் போது கவனமாக, சரியான தகவல்களுடன் நிரப்பவும். எந்தவொரு இடத்தையும் பூர்த்தி செய்யாமல் விட்டுவிடவேண்டாம்.
ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பது என்பது வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும். இன்சூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் வாழ்நாளுக்குப் பிறகும் உங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்கான பாதுகாப்பான சிறந்த திட்டமாகும். ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும்போது, சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீட்டு பாலிசியை வாங்கும் போது செய்ய வேண்டிவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தெளிவு வேண்டும்.
செய்ய வேண்டியவை
காப்பீடு எடுப்பதற்கான காரணம்
காப்பீட்டுத்தொகை எவ்வளவு என்பதை முடிவு செய்வது அவசியம்
வருமானத்திற்கு ஏற்ப காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவும்
செலுத்த வேண்டிய பிரீமியம் அதாவது காப்பீட்டிற்கான கட்டணம்
பிரீமியம் பாலிசியின் காலம் முழுவதும் செலுத்துவதா அல்லது ஒரு முறை மட்டும் செலுத்துவதா? இந்தக் கேள்விக்கான பதிலை சந்தேகமின்றி தெரிந்துக் கொள்ளவும்
தொடர்ந்து பிரீமியம் செலுத்துவது என்றால், மாதம்/காலாண்டு/அரையாண்டு/ஆண்டு என்ற தெரிவுகளில், உங்களுக்கு எது ஏற்றது என்பதை புரிந்துக் கொள்ளவும்
கட்டணம் செலுத்துவதற்கு சுலமாக ECS (எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ்) பேமெண்ட் விருப்பம் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்
படிவத்தை கவனமாகவும் சரியான விவரங்களுடன் நிரப்பவும்
மேலும் படிக்க | முழு நேர வேலை பார்ப்பவர்களும் முதலாளி ஆகலாம்! ‘இதை’ செய்யுங்கள் போதும்...
விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும் தகவல்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு. ஏனென்றால், பாலிசி காலம் முடிவடையும்போது அல்லது இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்போது, விண்ணப்பத்தில் உள்ள தகவல்களின்படியே வழங்கப்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பாலிசியில் நாமினி யார் என்பதையும் அதன் விவரங்களையும் பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்யவும்
படிவத்தில் இடம்பெற்றிருக்கும் மொழி உங்களுக்கு தெரியாததாக இருந்தால், கேள்விகள் உங்களுக்கு சரியாக விளக்கப்பட்டுள்ளதா என்பதையும், அவற்றை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளீர்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விவரத்தை விண்ணப்பப் படிவத்தில் அறிவிக்க வேண்டும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்தபிறகு, அதை நகலெடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
பாலிசி வாங்கும் போது செய்யக்கூடாதவை
விண்ணப்பத்தை வேறு ஒருவர் பூர்த்தி செய்வது
சரியான/உறுதியற்ற தகவல்களைத் தருவது
எழுத்துப்பிழை இருப்பது
அடித்து எழுதுவது
சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்காமல் இருப்பது
நாமினியை நியமிக்காதது
மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ