கண்களை நாம் சிமிட்டுவது எந்த அளவிற்கு சகஜமான நிகழ்வோ, அதே அளவிற்கு கண்கள் துடிப்பதும் சகஜமான நிகழ்வுதான். ஒரு சிலர், பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது என்றும், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது என்றும் கூறுவதுண்டு. ஆனால் இது உண்மை தானா என்பது பலரும் அறியாத விஷயம்.
கண் துடிப்பதற்கான ஆன்மிக காரணங்கள்..
பொதுவாகவே நமக்கு எந்த நல்லது கெட்டது நிகழும் முன்பும் நமது உறுப்புகள் அதை அறிந்து கொண்டு நமக்கு உணர்த்தும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இதற்கு துடி சாஸ்திரம் என்று பெயர். கண்கள் மட்டுமன்றி, நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் துடிக்குமாம். கண் மிகவும் மென்மையான, நாம் அதிகம் உபயோகிக்கும் ஒரு பாகம் என்பதால், அது துடிக்க ஆரம்பிக்கும் போதே நாம் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிடுவோம். துடி சாஸ்திர நூலின் படி, உடலில் இடது பக்கம் துடித்தால் அது நன்மை என்றும் வலது பக்கம் துடித்தால் அது நடக்க இருக்கும் தீமையை உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது.
யாருக்கு எந்த பக்க கண் துடித்தால் நல்லது?
ஆண்களுக்கு வலது கண் துடிப்பது, பெண்களுக்கு இடது கண் துடித்தாலும் நன்மைகள் நடக்கும் அறிகுறியாக அது கருதப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு மாறாக ஆண்களுக்கு இடது கண் துடித்தாலும் பெண்களுக்கு வலது கண் இடித்தாலும் அது தீமை வர இருக்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பல உதாரணங்கள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற இதிகாச நூலல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு என்ன பலன் ஏற்படும்?
ஆண்களுக்கு வலது கண் துடித்தால் அவர்களுக்கு பெருமையும் புகழும் வந்து சேருமாம். மேலு, வலது கண் இமை துடித்தால் அவர்கள் வாழ்வில் ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் தீரும் என்றும் கூறப்படுகிறது. அதுவே, இடது பக்க கண் துடித்தால் தேவையற்ற வம்புகளும் சண்டைகளும் ஏற்படுமாம்.
மேலும் படிக்க | திருமண உறவில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
பெண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது?
ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நன்மை ஏற்படுவது போல, பெண்களுக்கு இடது கண் பகுதி துடித்தால் நல்ல விஷயங்கள் நடக்குமாம். இவர்களின் இடது கண் துடித்தால் புகழ், செல்வம் வந்து சேருமாம். இடது கண் இமை துடித்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அகலுமாம். வலது கண் துடித்தால் அன்புக்குரியவர்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது.
கண் துடிப்பதற்கான அறிவியல் காரணங்கள் என்ன?
> எப்போதாவது கண் துடிப்பது மிகவும் சாதாரணமான விஷயம். ஆனால் இதுவே தொடர்ந்தால் நமது கண் பார்வைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
>அடிக்கடி கண் துடித்தால் அதற்கு blepharospasm என்று பெயராம். இது, சரியாக தூங்கவில்லை என்றாலோ, அதிக சோர்வு அல்லது காய்ந்து போன கண்களாலோ ஏற்படுமாம்.
>ஒரு சிலருக்கு உடல் நலக்கோளாறுகளை காண்பிக்கும் அறிகுரியாகவும் கண் துடிக்குமாம்.
மேலும் படிக்க | கையில் வளையல் அணிந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்குமா? ஆன்மிகம் மற்றும் அறிவியலின் பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ