RRC Group D Recruitment 2020: அரசாங்கம் வெளியிட்ட பெரிய அறிவிப்பு, 20% சீட்கள் reserved!!

NTPC, அமைச்சக மற்றும் குரூப் டி ஆகியவற்றின் 1.40 லட்சம் ஆட்சேர்ப்புக்கு 2.40 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2020, 04:58 PM IST
  • எந்தவொரு தேர்வும் இல்லாமல் அப்ரெண்டிஸுகளுக்கு நிரந்தர வேலையை வழங்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் அமைப்புகள் கோருகின்றன.
  • 2018 ரயில்வே ஆட்சேர்ப்பில், குரூப் டி பதவிகளில் 1288 அப்ரெண்ஸ்கள் இடம் பெற்றனர்.
  • ரயில்வேயில் பல துறைகளில் பணிபுரியும் பயிற்சி பெற்றவர்கள் நிரந்தர வேலைகளை தொடர்ந்து கோருகின்றனர்.
RRC Group D Recruitment 2020: அரசாங்கம் வெளியிட்ட பெரிய அறிவிப்பு, 20% சீட்கள் reserved!! title=

RRC Group D Recruitment 2020: ரயில்வேயில் அப்ரெண்டிசாக, அதாவது பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட குரூப் டி (லெவல் -1) இன் 1.03 லட்சம் ஆட்சேர்ப்பு குறித்து ரயில்வே ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த 1,03,769 காலி இடங்களில் 20 சதவீதம் அப்ரெண்டிசுகளுக்காக ஒதுக்கப்படும் என இந்தியன் ரயில்வே (Indian Railway) கூறியுள்ளது.

NTPC, அமைச்சக மற்றும் குரூப் டி ஆகியவற்றின் 1.40 லட்சம் ஆட்சேர்ப்புக்கு 2.40 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. அப்ரெண்டிஸ் சட்டம் 2016 இன் கீழ், இந்தியன் ரயில்வே, லெவல் -1 இன் 1.03 லட்சம் ஆட்சேர்ப்புகளில் 20% (20,734 பதவிகளை) அப்ரெண்டிஸ் இளையர்களுக்காக ஒதுக்கியுள்ளது.

ரயில்வே அப்ரெண்டிஸ் திட்டத்தின் கீழ், ரயில்வேயில் அவ்வப்போது வெவ்வேறு வேலைகளைச் செய்வதற்கான திறமையைக் கற்றுக்கொள்வதற்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. பயிற்சி பெற்ற இந்த இளைஞர்கள் அப்ரெண்டிஸ்கள் என அழைக்கப்படுகிறார்கள். ரயில்வேயில் பல துறைகளில் பணிபுரியும் பயிற்சி பெற்றவர்கள் நிரந்தர வேலைகளை தொடர்ந்து கோருகின்றனர். ரயில்வே ஊழியர்களின் அமைப்புகளும் தொடர்ந்து இந்த கோரிக்கையை எழுப்புகின்றன.

எந்தவொரு தேர்வும் இல்லாமல் அப்ரெண்டிஸுகளுக்கு நிரந்தர வேலையை வழங்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் அமைப்புகள் கோருகின்றன. 2018 ரயில்வே ஆட்சேர்ப்பில், குரூப் டி பதவிகளில் 1288 அப்ரெண்டிஸ்கள் இடம் பெற்றனர்.

ALSO READ: வெறும் 5000 ரூபாயில் இந்த தொழிலை தொடங்கி, மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்!!

இந்த முறை ஆட்சேர்ப்பில், முன்பைப் போலவே, 10 வது தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ. (ITI) தகுதிப் படிப்பாக கோரப்பட்டுள்ளது.  முந்தைய ஆட்சேர்ப்பில் தேர்வு செயல்முறை பின்பற்றப்பட்டதைப் போலவே, இந்த ஆட்சேர்ப்பிலும் அதே தேர்வு செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 7 வது சிபிசி சம்பள அளவுகளில் லெவல்-1ன் படி சம்பளம் கிடைக்கும். ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களில், பொதுப் பிரிவைச் (General Category) சேர்ந்த ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும்.

கணினி அடிப்படையிலான சோதனை (CBT) மற்றும் உடல் திறன் சோதனை (PET) அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சிபிடி-யில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பிஇடி-க்கு அழைக்கப்படுவார்கள். CBT இல் மதிப்பெண்களை இயல்பாக்கும் செயல்முறை ஏற்றுக்கொள்ளப்படும். மொத்த காலியிடங்களின் படி, மூன்று மடங்கு வேட்பாளர்கள் உடல் திறன் சோதனைக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த முறையைப் போலவே இந்த முறையும் குரூப் டி CBT-யில் நெகடிவ் மார்கிங் இருக்கும். 

ALSO READ: தபால் அலுவலகத்தின் 7 சூப்பர்ஹிட் திட்டங்கள்... இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News