Work From Home: லேப்டாப் பிரச்சனை ஏற்படுத்தாமல் FIT ஆக வைத்திருக்க சில Tips

அலுவலகத்தில் பணிபுரியும் போது, கணிணியில் ஏற்படும்  பிரச்சினைகளை தீர்க்க,  ஐ.டி  துறை உடனே வந்து உதவும். ஆனால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது, நாம் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 27, 2021, 09:37 AM IST
  • நம்மை பிட்டாக வைத்திருப்பதைப் போல், கம்ப்யூட்டரையும் பிட் ஆக வைத்திருக்க வேண்டும்.
  • அலுவலகத்தில், கணிணியில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, ஐ.டி துறை உடனே வந்து உதவும்.
  • வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது, நாம் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்
Work From Home: லேப்டாப் பிரச்சனை ஏற்படுத்தாமல் FIT ஆக வைத்திருக்க சில Tips title=

இந்த கொரோனா காலத்தில், ​​Work From Home, அதாவது, வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொதுவான சிக்கல், பிரச்சனை என பார்த்தால், லேப்டாப் அல்லது கணிணி ஹேங்க் ஆவது, அல்லது ஸ்லோவாக செயல்படுவது ஆகியவை.  

அலுவலக மீட்டிங், அல்லது முக்கியமாக கணிணியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது கணிணி ஹேங்க ஆனாலோ, அல்லது மிகவும் ஸ்லோவாக வேலை செய்தாலோ பிரச்சனை தான். அதனால், டென்ஷனை தவிர்க்க. நம்மை பிட்டாக வைத்திருப்பதைப் போல், கம்ப்யூட்டரையும் பிட் ஆக வைத்திருக்க வேண்டும்.

அலுவலகத்தில் பணிபுரியும் போது, கணிணியில் ஏற்படும்  பிரச்சினைகளை தீர்க்க,  ஐ.டி  துறை உடனே வந்து உதவும். ஆனால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது, நாம் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்

கம்யூட்டர் (Computer) மிகவும் பழையதாக இருந்தால், பொதுவாக, மிகவும் ஸ்லோவாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதன் வேகத்தை அதிகரிக்க அதன்  ஹார்ட்வேரை மாற்ற வேண்டும்.  இதற்காக, உங்கள் கணினி அல்லது லாப்டாப்பின் ரேம் (RAM) அதிகரிக்க வேண்டும். கூடுதலாக, கணினியின் ஆபரேட்டரின் சிஸ்டம் என்ன என்பதை அறிந்து கொண்டு, மிகவும் பழமையானதாக இருந்தால், அதற்கேற்ப வல்லுநரின் ஆலோசனை பெற்று அப்டேட் செய்ய வேண்டும்.  

அபரேடிங் சிஸ்டத்தை புதுப்பிக்கும் செய்தி அல்லது நோடிஃபிகேஷனை கவனிக்கவும். கணினியை அவ்வப்போது அப்டேட் செய்வது நல்லது.

ALSO READ | CoWIN: தடுப்பூசிக்கான ஸ்லாட்டை எளிதாக புக் செய்ய சில டிப்ஸ்

பயன்படுத்தாத சில சாப்ட்வேர்கள் அல்லது ஆப்கள்  லேப்டாப் அல்லது கணினிகளில் இருந்தால் அதனை அகற்றவும். அது அனாவசியமாக கணினியில் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கம்யூட்டரை செயல்திறனை ஸ்லோவாக்கும்.

அதோடு, கணிணியை சுத்தமாக பராமரிக்கவும். அதோடு, அக்கறையுடன் பத்திரமாக கையாளவும். 

ALSO READ | அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; சானிடைசரை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து
 

Trending News