சுவையான மக்கச்சோள பக்கோடா செய்வது எப்படி...

நாட்டு மக்கள் தற்போது நாடு தழுவிய முழு அடைப்பில் சிக்கி தவித்து வருகின்றனர், இந்நிலையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என திட்டமிடுகின்றனர். இந்நிலையில் இன்று நாம் மக்காச்சோளம் பக்கோடாவை எளிய முறையில் தயாரிப்பது எவ்வாறு என பார்ப்போம்.

Last Updated : Apr 25, 2020, 03:06 PM IST
சுவையான மக்கச்சோள பக்கோடா செய்வது எப்படி... title=

நாட்டு மக்கள் தற்போது நாடு தழுவிய முழு அடைப்பில் சிக்கி தவித்து வருகின்றனர், இந்நிலையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என திட்டமிடுகின்றனர். இந்நிலையில் இன்று நாம் மக்காச்சோளம் பக்கோடாவை எளிய முறையில் தயாரிப்பது எவ்வாறு என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் - 

  • சோளம் - 4, 
  • சோளப்பொடி - 2-3 தேக்கரண்டி, 
  • கொத்தமல்லி - 2 தேக்கரண்டி (முனை நறுக்கியது), 
  • இஞ்சி பேஸ்ட் - 1 சிறிய தேக்கரண்டி, 
  • பச்சை மிளகாய் - 2 (முனை நறுக்கியது), 
  • கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன், 
  • சிவப்பு மிளகாய் தூள் அரை ஒரு டீஸ்பூன், 
  • எண்ணெயை வறுப்பதற்கு ஏற்ற அளவு.

தயாரிக்கும் முறை - மக்காச்சோள பக்கோடாவை தயாரிக்க, முதலில் சோளத்தை தட்டி எடுக்கவும். பின்னர் பக்கோடா மாவு கலவை தயாரிக்க சோளப்பொடி, கொத்தமல்லி தூள், இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் பச்சை கொத்தமல்லி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து நன்கு கலக்கவும். மாவு சற்று தடிமனாகத் தெரிந்தால், 1-2 தேக்கரண்டி தண்ணீரைச் சேர்த்து நன்றாக பிசையவும். 

பக்கோடாக்களை வறுத்தெடுக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் சூடாக இருக்கும்போது, ​​பிசைந்தெடுத்த மாவினை சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து எண்ணையில் போடவும். ஒரு நேரத்தில் 6-7 உருண்டை இட்சு வறுத்தெடுப்பது நல்லது. 

அனைத்து பக்கோராக்களும் பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை புரட்டவும். அவ்வறவு தான், பகோடாக்களை வெளியே எடுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து விரும்பிய சட்னியுடன் சாப்பிடவும்.

Trending News