ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவின் நிலையைப் பொறுத்து கால சர்ப்ப தோஷம் உருவாகிறது. பல ஜோதிடர்கள் கால சர்ப்ப யோகத்தை நம்பவதில்லை. எனினும் பாத்ரபத மாத அமாவாசை நாள் கால சர்ப் தோஷத்தை தடுக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. கால் சர்ப் தோஷம் என்றால் என்ன, அதைத் தடுப்பதற்கான தீர்வு என்ன என்று பார்ப்போம்.
கால் சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
கால சர்ப்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என ஜோதிடத்தில் பொதுவாக அழைக்கப்படுகிறது. பாம்பை ஒருவர் அல்லது சிலர் அடித்துக் கொல்லும் போது அது உயிர் விடும் தறுவாயில் கொல்பவரைப் பார்த்து விடும் தோஷம் தான் சர்ப்ப தோஷம். கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்குத் திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படும். அப்படி நடந்தாலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு உடல் நல குறைவுடன் பிறக்கும். தற்போது நலமுடன் இருந்தாலும், அடிக்கடி நோய் தாக்குதலுக்கு உள்ளாகுதல் நிகழலாம்.
ALSO READ | 2022 இல் வேலை, தொழிலில் வெற்றி கொடி நாட்ட உள்ள ராசிகள் இவர்களே
காலசர்ப்ப யோகத்தின் அறிகுறிகள்
1. கனவில் பாம்பை அடிக்கடி பார்ப்பது
2. கடின உழைப்புக்குப் பிறகும் வேலையில் விரும்பிய வெற்றி கிடைக்காமல் இருப்பது.
3. மன அழுத்தத்தால் அவதிப்படுதல்.
4. சரியான முடிவை எடுக்க இயலாமை.
5. முரண்பாடான குடும்ப வாழ்க்கை.
கால சர்ப்ப தோஷம் 12 வகைகள்
1. அனந்த கால சர்ப்ப தோஷம்
2. சங்க சூட கால சர்ப்ப தோஷம்
3. கடக சர்ப்ப தோஷம்
4. குளிகை சர்ப்ப தோஷம்
5. வாசுகி சர்ப்ப தோஷம்
6. சங்கல்ப சர்ப்ப தோஷம்
7. பத்ம சர்ப்ப தோஷம்
8. மகா பத்ம சர்ப்ப தோஷம்
9. தக்ஷக சர்ப்ப தோஷம்
10. கார் கோடக சர்ப்ப தோஷம்
11. விஷ் தார சர்ப்ப தோஷம்
12. சேஷ நாக சர்ப்ப தோஷம்
திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கும் பொழுது நாம் ஜோதிடரிடம் சென்று ஜாதகத்தை காண்பிக்கும் பொழுது அவர்கள் பெரும்பாலும் கூறுவது கால சர்ப்ப தோஷம் தான். இந்த கால சர்ப்ப தோஷம் நீங்க பல்வேறு பரிகாரங்களும் கூறப்படுகிறது. அதன்படி இந்த எளிய பரிகாரங்களை செய்யும் பொழுது கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
* நாதஸ்வரத்தில் இருக்கும் வாயகன்ற முன் பகுதி ராகுவையும், நாம் வாய் வைத்து ஊதும் இடத்தில் கேதுவையும் குறிப்பதாக கூறப்படுகிறது. இந்த நாதஸ்வரத்தில் இருந்து வரும் ஒலியின் அலைகள் நமக்கு கால சர்ப்ப தோஷத்தில் இருந்து தீராத விடுதலையை கொடுக்கிறது என்பது நம்பிக்கை.
* உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்திற்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். கோவில் மணியை வாங்கிக் கொடுத்தால் தோஷத்திலிருந்து நீங்க பெறுவதாக ஐதீகம் உள்ளது.
* சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்வது சிறந்தது.
* கால சர்ப்ப தோஷம் நீங்க, ராகு சாந்திக்கு இரவில் பரிகாரம் செய்யுங்கள். இரவில் சிவன் கோவிலில் அல்லது ராகு காலத்திலோ ராகுவை வழிபடவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்வல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | 2022-ல் அமையவுள்ளன அட்டகாசமான 4 யோகங்கள்: இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR