மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்கள் குடிமக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அவ்வப்போது பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.மக்களின் சேமிப்பை அதிகரிக்கவும், நிதி பாதுகாப்பை அளிக்கவும் பல திட்டங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. இவற்றில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண் குழந்தைகள் என பிரத்யேகமான பல நலத்திட்டங்களும் அடங்கும். அந்த வகையில் உத்தராகண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ள ஒரு அசத்தலான திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசு திட்ட புதுப்பிப்பு:
சாதாரண மக்களின் சேமிப்பு திறனை வளர்த்து எதிர்காலத்திற்கான பாதுகாப்பை அளிக்க அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களை கோடீஸ்வரர்களாக்கும் மாநில அரசின் திட்டத்தைப் பற்றி இங்கே காணலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். 'லக்பதி தீதி திட்டம்' அதாவது லட்சாதிபதி சகோதரி திட்டம் உத்தரகாண்ட் மாநில அரசால் பெண்களுக்காக நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள 1.25 லட்சம் பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2025 -க்குள் பெண்கள் லட்சாதிபதிகள் ஆவார்கள்
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அரசால் குறிப்பாக பெண்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. லக்பதி தீதி திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டுக்குள் 1.25 லட்சம் பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவார்கள்.
இத்திட்டத்தின் சிறப்பு என்ன?
- இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, அந்தப் பெண் மாநிலத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
- இதனுடன் பெண்களை சுயஉதவி குழுக்களுடன் இணைந்திருக்க வேண்டும்.
- இந்த திட்டம் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்டது.
- இந்த திட்டத்தின் கீழ், பெண்களின் பொருளாதார மேம்பாடு உத்வேகம் அளிக்கப்படுகிறது.
திட்டத்தில் சேர என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, உங்களிடம் அசல் குடியிருப்புச் சான்றிதழ் இருக்க வேண்டும். இது தவிர ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை அவசியம். இது தவிர, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவைப்படும்.
மேலும் படிக்க | தபால் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டம்: ரூ.2 லட்சம் வட்டி கிடைக்கும்
வட்டி இல்லாமல் கடன்
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்கள் தங்கள் தொழிலை எந்தவித நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முன்னெடுத்துச் செல்லவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்டக்கது. பெண்கள் தங்கள் தொழிலை எளிதாக விரிவுபடுத்தும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்களை அரசு வழங்குகிறது.
எந்தெந்த பெண்களுக்கு பலன் கிடைக்கும்?
முதல்வர் லக்பதி தீதி யோஜனா (Mukhymantri Lakhpati Didi Yojana ) திட்டத்தின் கீழ், சுயஉதவி குழுக்களுடன் தொடர்புடைய மற்றும் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாக உள்ள மாநில பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பெண்களின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் மாநில அரசு இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
கூடுதல் தகவல்:
இந்திய அஞ்சல் அலுவலகத்தால் பல வகையான பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக திட்டங்களில் அதிக ஆபத்து இல்லாததால் இவை மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் பெண்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்து பெண்களும் நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள். இந்த அஞ்சலக திட்டத்தில், பெண்கள் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்து பம்பர் ரிட்டர்ன் பெறலாம். இந்த சேமிப்பு திட்டத்தின் பெயர் மகிலா சம்மான் பத்திரம் (Mahila Samman Certificate) ஆகும். இந்தத் திட்டத்தில், பெண்கள் சிறிய முதலீடுகளைச் செய்து நல்ல லாபத்தைப் பெறலாம்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை நீங்கள் புதுப்பிக்கவில்லையா? இந்த சேவைகளை பெற முடியாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ