அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் (God) புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை (Pooja) செய்வதன் தாத்பரியம். கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம்.
அவரிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்க வேண்டுமென்றால் நம் பெயரில் செய்யலாம். ஆனால், கடவுளுக்கு நம் கோரிக்கை தெரியாதா என்ன? எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும்.
ALSO READ | இறை வழிபாட்டின் போது மந்திரத்தை தவறாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா?
அபிஷேக நீரை என்ன செய்வது?
மூலஸ்தானத்தில் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வெளியேறுவதற்கு, கருவறைக்கு வெளியே ஒரு வழி இருக்கும். அதன் வழியாக வரும் அபிஷேக நீரை பலரும் பாட்டிலில் பிடித்துச் செல்வதை நாம் பார்த்திருப்போம்.
பலர் அந்த நீரை வலது கையால் பிடித்து, தலையில் தெளித்துக் கொள்வார்கள். அபிஷேக நீர் கருவறையில் உள்ள இறைவன் திருமேனியில் பட்டு புனித மடைவதுடன், அந்நீரில் இறைவன் உடன் உறையும் தேவ கணங்களின் ஆசிகளும் கலந்திருக்கும் என்பது ஐதீகம். எனவே, அந்த நீரை வீணாக்காமல், நம் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ தெளித்து வழிபாடு செய்து வளங்களைப் பெறலாம்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR