கம்மி விலையில் தாய்லாந்தை சுற்றிப் பார்க்கலாம்.. IRCTC அசத்தல் டூர் பேக்கேஜ்

IRCTC Tour Package: நீங்களும் புத்தாண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ தாய்லாந்துக்கு செல்லலாம். ஐஆர்சிடிசி, தாய்லாந்து டூர் பேக்கேஜ் கொண்டு வந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 9, 2023, 06:41 AM IST
  • நீங்கள் 2024 ஆம் ஆண்டில் தாய்லாந்து செல்லலாம்.
  • விமான டிக்கெட், ஹோட்டல் மற்றும் உணவு செலவுகள் ஆகியவை அடங்கும்.
  • உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியையும் (Local Tour Guide) பெறுவீர்கள்.
கம்மி விலையில் தாய்லாந்தை சுற்றிப் பார்க்கலாம்.. IRCTC அசத்தல் டூர் பேக்கேஜ் title=

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: தாய்லாந்து டூர் பேக்கேஜ்: நீங்களும் புத்தாண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா?அப்போ உடனே தாய்லாந்துக்கு செல்லவும். ஐஆர்சிடிசி, மும்பை, லக்னோ, கொல்கத்தாவிலிருந்து தாய்லாந்திற்கு டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ்கள் அனைத்தும் புத்தாண்டுக்கு முன்பதிவு செய்யலாம். இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation – IRCTC) பட்ஜெட்டில் தாய்லாந்து டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது.

நீங்கள் 2024 ஆம் ஆண்டில் தாய்லாந்து செல்லலாம்:

நீங்கள் கம்மி விலையில் வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தால், தாய்லாந்து சிறந்த இடம், ஏனெனில் இப்போது இந்தியர்கள் தாய்லாந்துக்கு விசா இலவச நுழைவைப் பெறுகிறார்கள். இந்தியர்கள் தாய்லாந்திற்கு வந்தவுடன் விசா பெறுகிறார்கள். அதாவது, நீங்கள் முன்கூட்டியே விசா பெற தேவையில்லை. நீங்கள் தாய்லாந்தில் உள்ள விமான நிலையத்தை அடைந்ததும், நீங்கள் விசா கட்டணத்தை செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் பாஸ்போர்ட்டில் விசா முத்திரையிடப்படும்.

மேலும் படிக்க | பணத்தை வாரி வழங்கும் சூப்பரான SBI Sarvottam FD திட்டம்...வாய்ப்பை நழுவ விட்ராதீங்க

இந்த சேவைகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்:

தாய்லாந்து டூர் பேக்கேஜ்களில் (Tour Package) விமான டிக்கெட், ஹோட்டல் மற்றும் உணவு செலவுகள் ஆகியவை அடங்கும். உங்கள் தனிப்பட்ட செலவுகளை நீங்களே ஏற்க வேண்டும். இந்த சுற்றுலா தொகுப்பில், உள்ளூர் பயணங்களுக்கு பேருந்து சேவை வழங்கப்படும். தாய்லாந்திற்கு 4 இரவுகள் மற்றும் 5 பகல்கள் பயணம் செய்ய வாய்ப்பை கொடுக்கிறது. தாய்லாந்து (Thailand), பாங்காக் (Bangkok) மற்றும் பட்டாயா (Pattaya)  ஆகியவை இந்த டூர் பேக்கேஜில் காண்பிக்கப்படும். உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியையும் (Local Tour Guide) பெறுவீர்கள்.

லக்னோ டு தாய்லாந்து டூர் பேக்கேஜ்:

IRCTC தாய்லாந்து டூர் பேக்கேஜை (IRCTC Thailand Tour Package) கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் லக்னோவில் இருந்து தொடங்கும். IRCTC இணையதளத்தின்படி ஒருவர் பயணம் செய்தால் ரூ.67,500 செலுத்த வேண்டும். இரண்டு பேர் சென்றால் ஒவ்வொருவரும் ரூ.57,900 செலுத்த வேண்டும். மூன்று பேருடன் பயணிக்க ஒரு நபருக்கான கட்டணம் ரூ.48,700 ஆகும். மேலும் தகவலுக்கு https://irctctourism.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

மும்பை டு தாய்லாந்து டூர் பேக்கேஜ்:

மும்பையிலிருந்து தாய்லாந்து டூர் பேக்கேஜையும் IRCTC வழங்குகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தின்படி ஒருவர் பயணம் செய்தால் ரூ.67,300 செலுத்த வேண்டும். இரண்டு பேர் சென்றால் ஒவ்வொருவரும் ரூ.58,900 செலுத்த வேண்டும். மூன்று பேருடன் பயணிக்க ஒரு நபருக்கான கட்டணம் ரூ.58,900 ஆகும். மேலும் தகவலுக்கு https://irctctourism.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

 Package Cost (per Person) Excluding 5%TCS*

Class

Occupancy

Price (Per Person)

Comfort

Adult on Single Occupancy

Rs. 67300/-

Adult on Double

Rs. 58900/-

Adult on Triple Occupancy

Rs. 58900/-

Child With Bed (5-11 yrs)

Rs. 55300/-

Child without bed (5-11 yrs)

Rs. 49300/-

Child without bed (2-4 Yrs)

Rs. 36100/-

 

மேலும் படிக்க | Kisan Credit Card: குறைந்த வட்டியில் 3 லட்சம் வரை கடன்! விவசாயிகளுக்கு முன்னுரிமை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News