மூத்த குடிமக்களுக்கு என்ஜாய்மெண்ட்.. ரயில்வே வெளியிட்ட ஜாக்பாட் டூர் பிளான்

IRCTC Tour Package For South India Temples: ஐஆர்சிடிசி டூரிஸத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.irctctourism.com/ போர்ட்டலில் இந்தப் பேக்கேஜிற்கு (தென்னிந்தியாவிற்கான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்) ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 14, 2023, 11:45 AM IST
  • வரும் 11 டிசம்பர் 2023 அன்று இந்த சுற்றுப்பயணம் தொடங்கும்.
  • டூர் பேக்கேஜில் ரயில், பேருந்து, உணவு, கைடு, காப்பீடு போன்றவை அடங்கும்.
  • பேக்கேஜின் பெயர் : Dakshin Bharat Yatra by Bharat Gaurav Tourist Train.
மூத்த குடிமக்களுக்கு என்ஜாய்மெண்ட்.. ரயில்வே வெளியிட்ட ஜாக்பாட் டூர் பிளான் title=

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் அப்டேட்: உங்கள் வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்களுடன் நீங்கள் ஆன்மீக பயணம் செல்ல பிளானிங் செய்கிறீர்கள் என்றால் இந்த செய்தியை உடனே படிக்கவும். ஏனெனில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது ஐஆர்சிடிசி (IRCTC) டிசம்பர் மாதம் தென்னிந்தியாவிற்கு (Dakshin Bharat Yatra) ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலின் (Bharat Gaurav Tourist Train) இந்தப் பயணம் 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள் (11 nights and 12 days)கொண்டதாக இருக்கும். அதுமட்டுமின்றி தற்போது ஐஆர்சிடிசி இந்த பேக்கேஜுக்கான முன்பதிவையும் தொடங்கியுள்ளது. எனவே நீங்களும், அடுத்த மாதம் குளிர்கால விடுமுறையின் போது தென்னிந்தியாவைச் சுற்றிப்பார்க்க வேண்டுமானால், இந்த பேக்கேஜில் (IRCTC Tour package for south India) முன்பதிவு செய்யலாம். வரும் 11 டிசம்பர் 2023 அன்று இந்த சுற்றுப்பயணம் தொடங்கி 22 டிசம்பர் 2023 நிறைவடைகிறது.

எந்தெந்த இடங்களை பார்வையிட முடியும்?
தென்னிந்தியாவைச் சுற்றிப்பார்க்க (IRCTC Tour package) இந்த தொகுப்பின் கீழ், நீங்கள் கன்னியாகுமரி, கூடல் நகர், ஸ்ரீசைலம், ராமேஸ்வரம், ரேணிகுண்டா சந்திப்பு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். இந்த நகரங்களில் நீங்கள் திருப்பதி கோயில், மீனாட்சி அம்மன் கோயில், ராமநாதசுவாமி கோயில், கன்னியாகுமரி கோயில், விவேகானந்தர் பாறை, ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் மற்றும் மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் செல்லலாம். டூர் பேக்கேஜில் ரயில், பேருந்து, உணவு, கைடு, காப்பீடு போன்றவை அடங்கும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

ஒரு நபருக்கு எவ்வளவு செலவாகும்?
டூர் பேக்கேஜில் முன்பதிவு செய்வதற்கு ஒரு நபருக்கு (எகானமி வகை) ஆரம்பக் கட்டணம் ரூ.22,750 வசூலிக்கப்படும். இது தவிர, ஸ்டாண்டர்ட் வகைக்கு ரூ.36,100 மற்றும் கம்ஃபர்ட் வகைக்கு ரூ.39,500 வசூலிக்கப்படும். இதில், ஸ்லீப்பர் வகுப்பிற்கு 580 இருக்கைகளும், ஏசி 3க்கு 210 இருக்கைகளும் என மொத்தம் 790 இருக்கைகள் வழங்கப்படும். இந்த டூர் பேக்கேஜிங்கில் இணைய ஆன்லைனில் புக்கிங் செய்ய, IRCTC-யின் அதிகாரபூர்வ வெப்சைட்டான - www.irctctourism.com -ஐ பயன்படுத்தலாம். தவிர IRCTC சுற்றுலா வசதி மையம் (IRCTC Tourist Facilitation Center), மண்டல அலுவலகங்கள் (Zonal Offices) மற்றும் பிராந்திய அலுவலகங்கள் (Regional Offices) மூலமாகவும் ஆஃப்லைனில் புக்கிங் செய்யலாம்.

இந்த டூர் பேக்கேஜின் சிறப்பம்சங்கள்…
பேக்கேஜின் பெயர் : Dakshin Bharat Yatra by Bharat Gaurav Tourist Train
டூர் மொத்தம் எத்தனை நாட்கள் - 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள்
புறப்படும் தேதி - டிசம்பர் 11, 2023
போர்டிங்/டிபோர்டிங்- மால்டா டவுன், நியூ ஃபராக்கா, பாகூர், ராம்பூர்ஹாட், தும்கா, ஹன்ஸ்திஹா, பாகல்பூர், சுல்தங்கஞ்ச், ஜமால்பூர், கியுல், ஜமுய், ஜாஜா, ஜசிதி, ஜம்தாரா, சித்தரஞ்சன், குல்டி, தன்பாத், பொகாரோ, ராஞ்சி, ரூர்கேலா, ஜார்சுகுடா மற்றும் சம்பல்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அருமையான ஜாக்பாட் திட்டம்.. இப்பவே இந்த வங்கிகளில் முதலீடு செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News