Jobs Ready: வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு! ரயில்வேயில் லட்சக்கணக்கான வேலை காலி

Railway Vacancy 2023: ரயில்வேயில் வேலை கிடைக்குமா என்று ஏங்குபவரா நீங்கள்? உங்களுக்கான செய்தி இது. எங்கு, எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பதை அறிய, முழுமையான பட்டியலை தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 9, 2023, 05:36 PM IST
  • ரயில்வேயில் வேலை வேண்டுமா?
  • எங்கு, எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன?
  • வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு
Jobs Ready: வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு! ரயில்வேயில் லட்சக்கணக்கான வேலை காலி title=

புதுடெல்லி: இந்திய ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களில் 2.48 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது, இந்திய ரயில்வேயில் வேலை கிடைக்குமா? மத்திய அரசு பணி வாய்க்குமா என்று கனவு காண்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் செய்தியாகும். ரயில்வேயின் பல்வேறு துறைகளில் சுமார் 2.48 லட்சம் குரூப் சி பணியிடங்கள் காலியாக உள்ளன

இது தவிர குரூப் ஏ மற்றும் பி பிரிவில் சுமார் 2070 பணியிடங்களும் காலியாக உள்ளதாக, மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரிவான விவரங்களை அளித்துள்ளார். இதனுடன், ரயில்வேயில் அக்னிவீரர்கள் எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் என்தைப் பற்றிய தரவுகளையும் அவர் எடுத்துரைத்தார்.

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா என்றும், சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் ரயில்வேயில் எத்தனை ஆட்சேர்ப்புகள் நடந்துள்ளன என்றும் சுசில் குமார் மோடி கேட்டிருந்தார். அவருக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் விரிவான தகவல்களை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

ரயில்வேயில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன?

மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: பல்வேறு மண்டலங்களில் ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்கள் இவை. குரூப் சியில் மொத்தம் 248895 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேசமயம், குரூப் ஏ மற்றும் பி பிரிவில் 2070 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. இனி ரயிலில் இந்த சிறப்பு வசதி வழங்கப்படும்

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இது காலியிடங்களின் அளவு உட்பட பல விஷயங்களைப் பொறுத்தது என்றும் அவர் தெரிவித்தார். காலிப் பணியிடங்கள், குறிப்பாக ரயில்வேயால் ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நிரப்பப்படுகின்றன என்று அவர் கூறினார்.

தற்போதைய ஆட்சேர்ப்பின் நிலை என்ன?
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில், ஜூன் 30, 2023 வரை மொத்தம் 128349 விண்ணப்பதாரர்கள் குரூப் சி பிரிவில் ரயில்வேயால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் கூறினார். இது தொடர்பான தகவல்கள் இவை.

அக்னிவீரர்களுக்கு வாய்ப்பு உண்டா?
ரயில்வேயின் பல்வேறு ஆட்சேர்ப்புகளில், அக்னிவீரர்களுக்கு லெவல் 1ல் 10 சதவீத இடஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேல் ஒதுக்கீட்டின் கீழ் 5 சதவீத இட ஒதுக்கீடும் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார். இருப்பினும், இதற்கு, விண்ணப்பிப்பவர்கள் மற்ற அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் கான்ஸ்டபிள் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் அக்னிவீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அக்னிவீரர்களின் முதல் பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், அடுத்தடுத்த பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்த 1 ரூபாய் 'Coin' உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்

மேலும் படிக்க | முதலில் தக்காளி இப்போது வெங்காயம்.. எகிற இருக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News