இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்; வட்டி விகிதம் திடீர் உயர்வு

இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் அதாவது எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 2, 2022, 03:01 PM IST
  • எந்த வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிக வட்டி
  • இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டின் புதிய வட்டி விகிதம்
  • ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்; வட்டி விகிதம் திடீர் உயர்வு title=

இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் அதாவது எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது 5%க்கு பதிலாக 5.10% வட்டி 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்க்கு கிடைக்கும். மேலும் இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. முன்னதாக, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் தொகையின் (எஃப்டி) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதையடுத்து பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில் இப்போது இந்தியன் வங்கியும் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது.

மேலும் படிக்க | Bank Holidays in June 2022: ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது

இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டின் புதிய வட்டி விகிதம்
7 - 14 நாட்கள் : 2.8%
15 - 29 நாட்கள் : 2.8%
30 - 45 நாட்கள் : 3%
46 - 90 நாட்கள் : 3.25%
91 - 120 நாட்கள் : 3.5%
121 - 180 நாட்கள் : 3.75%
181 நாட்கள் - 9 மாதம் : 4%
9 மாதம் - 1 ஆண்டு : 4.4%
1 ஆண்டு : 5.1%
1 ஆண்டு - 2 ஆண்டு : 5.2%
2 ஆண்டு - 3 ஆண்டு : 5.25%
3 ஆண்டு - 5 ஆண்டு : 5.35%
5 ஆண்டு : 5.35%
5 ஆண்டுகளுக்கு மேல் : 5.35%

எந்த வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிக வட்டி

1 வருட ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி
ஐசிஐசிஐ : 5.00
எஸ்பிஐ : 5.10
எச்.டி.எஃப்.சி : 5.10
பஞ்சாப் நேஷனல் வங்கி : 5.10
இந்தியன் வங்கி : 5.10
ஆக்சிஸ் வங்கி :  5.25
கோடக் மஹிந்திரா : 5.40
தபால் அலுவலகம் : 5.50

2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி
ஐசிஐசிஐ : 5.00
எஸ்பிஐ : 5.20
எச்.டி.எஃப்.சி : 5.10
இந்தியன் வங்கி : 5.25
தபால் அலுவலகம் : 5.50
பஞ்சாப் நேஷனல் வங்கி : 5.10
ஆக்சிஸ் :  5.60
கோடக் மஹிந்திரா : 5.60

3 வருட ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி
ஐசிஐசிஐ : 5.20
எஸ்பிஐ : 5.30
எச்.டி.எஃப்.சி : 5.30
இந்தியன் வங்கி : 5.35
தபால் அலுவலகம் : 5.50
பஞ்சாப் நேஷனல் வங்கி : 5.10
ஆக்சிஸ் : 5.60
கோடக் மஹிந்திரா : 5.75

5 வருட ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி
எஸ்பிஐ : 5.40
எச்.டி.எஃப்.சி : 5.45
இந்தியன் வங்கி : 5.35
ஐசிஐசிஐ : 5.45
தபால் அலுவலகம் : 6.70
பஞ்சாப் நேஷனல் வங்கி : 5.10
ஆக்சிஸ் : 5.75
கோடக் மஹிந்திரா : 5.75 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News