உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா எந்த இடத்தில்?

உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

Last Updated : Mar 12, 2019, 06:59 PM IST
உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா எந்த இடத்தில்? title=

உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஆயுத இறக்குமதியில் உலக அளவில் 12 சதவீத பங்களிப்புடன் சவுதி அரேபியா முதலிடத்தில் இருக்கிறது. 2014-2018 காலகட்டத்தில் சர்வதேச அளவில் 9.5 சதவீத ஆயுத இறக்குமதியுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 2.7 சதவீத ஆயுத இறக்குமதியுடன் பாகிஸ்தான் 11வது இடத்திலும் இருக்கிறது.

முன்னதாக 2013-2017 மதிப்பீட்டு ஆண்டுகளில் 13 சதவீத ஆயுத இறக்குமதியுடன் சர்வதேச அளவில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்திருந்தது. 2009 முதல் 2018-ம் ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 24 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் அமெரிக்க ஆயுத இறக்குமதி 81 சதவீதம் குறைத்துள்ளது. 

2014 - 2018 காலகட்டத்தில் ரஷ்யாவில் இருந்து மட்டும் இந்தியா 54 சதவீத ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News