Tax Saving Tips: பெற்றோர் / கணவன் / மனைவி வீட்டில் தங்கி HRA வரி விலக்கு கோர முடியுமா?

HRA Tax Exemption:வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது பெற்றோர் / கணவன் / மனைவி பெயரில் உள்ள வீட்டில் தங்கி ரசீதை காண்பித்து எச்ஆர்ஏ கிளெயிம் செய்ய முடியுமா?  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2022, 06:14 PM IST
  • எஹ்ஆர்ஏ மீதான வருமான வரி விலக்கு.
  • பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தால், வருமான வரி விலக்கு பெற முடியுமா?
  • வருமான வரி விதிகள் சொல்வது என்ன?
Tax Saving Tips: பெற்றோர் / கணவன் / மனைவி வீட்டில் தங்கி HRA வரி விலக்கு கோர முடியுமா? title=

எஹ்ஆர்ஏ மீதான வருமான வரி விலக்கு: மக்கள் வரியைச் சேமிக்க பல்வேறு விதமான வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று வீட்டு வாடகை கொடுப்பனவு மூலம் செய்யப்படும் வரிச்சேமிப்பாகும். 

பலருக்கு அவர்கள் வேலை பார்க்கும் அதே ஊரிலேயே அவர்களது தாய் தந்தையரது சொந்த வீடும் இருக்கும். பலர், தங்களது பெற்றோர் அல்லது கணவன் / மனைவி பெயரில் உள்ள வீட்டில் தங்கி, அவர்களுக்கு வீட்டு உரிமையாளரைப் போல வாடகை செலுத்தி வாடகை ரசீதை பெற்றுக்கொள்கிறார்கள். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது இந்த ரசீதை காண்பித்து எச்ஆர்ஏ கிளெயிம் செய்கிறார்கள். ஆனால், இப்படி செய்யலாமா? இப்படி செய்வது செல்லுபடி ஆகுமா?

இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும்

கண்டிப்பாக இப்படி செய்யலாம்!! இது போன்ற ஒரு வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம், தனது பெற்றோர் அல்லது கணவன் / மனைவியின் வீட்டில் வசிக்கும் எவரும் வாடகை ரசீது மூலம் எச்ஆர்ஏ வரிவிலக்கு பெறலாம் என்று உத்தரவிட்டுள்ளது. 

எனினும், இதை பயன்படுத்த சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நபரின் பெற்றோரின் பணத்தில் வீடு கட்டப்பட்டிருக்க வெண்டும் என்பது நிபந்தனை. இதை நிரூபித்தால், எச்ஆர்ஏ-வை எளிதாகக் கோரலாம். அதை நிரூபிக்கத் தவறினால், பின்னர் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்க நேரிடலாம். 

மேலும் படிக்க | மே மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை 

நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது

இதேபோல், டெல்லியில் ஒரு நபர் தனது பெற்றோர் வீட்டில் வசிக்கும் போது வாடகை ரசீதுகளை சமர்ப்பித்து எச்ஆர்ஏ வரி விலக்கு கோரினார். ஆனால், வருமான வரித்துறை அவருக்கு விலக்கு அளிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, வரி செலுத்துபவர் தனது புகாருடன் வருமான வரித் தீர்ப்பாயத்தை அணுகினார். 

இந்த வழக்கை விசாரித்த வருமான வரித்துறை தீர்ப்பாயம் வரி செலுத்துவோருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதனுடன், ஒருவர் தனது கணவன் / மனைவி அல்லது அவரது பெற்றோரின் வீட்டில் வசிப்பவராக இருந்தால், அவர் எச்ஆர்ஏ (வீட்டு வாடகை கொடுப்பனவு) விலக்கு கோரலாம் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், அதே நேரத்தில், வீடு தங்கள் பணத்தில் கட்டப்படவில்லை, தங்கள் கணவன் / மனைவி / பெற்றோரது பணத்தில்தான் கட்டப்பட்டது என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.

வாடகை மூலம் வரும் வருமானம் காட்டப்பட வேண்டும்

நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் உங்கள் பெற்றோர் அல்லது கணவன் / மனைவியை வீட்டு உரிமையாளராகக் காட்டினால், அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கில் வாடகை மூலம் சம்பாதித்த வருமானத்தைக் காட்ட வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க | ITR Filing Rules: விதிகளில் பெரிய மாற்றம், தெரிந்துகொள்வது அவசியம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News