Pan Card Aadhar Card Link: வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு முன், பான் கார்டு ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருமான வரித் துறை ஆலோசனையின்படி, மார்ச் 31ஆம் தேதிக்கு முன் இரண்டு அடையாள அட்டைகளும் இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கட்டாயம் என்பதால் பயனாளர்கள் தாமதிக்காமல் இரண்டு அட்டையையும் இணைக்க வேண்டும். வருமான வரித்துறை சட்டத்தின்படி, விலக்கு வகையின்கீழ், வராத அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும், மார்ச் 31ஆம் தேதிக்கு முன், தங்களது பான் கார்டை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல், இணைக்கப்படாத பான் கார்டு செயலிழந்துவிடும்" என்று பொது ஆலோசனையில் வருமான வரித்துறை கூறியது. உங்கள் பான் கார்டு, ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியாகும்.
யாருக்கு பான்-ஆதார் இணைப்பு தேவையில்லை?
வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 139AAஇன் படி, உங்கள் பான் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், அது ஏப்ரல் 1ஆம் தேதி, முதல் செயல்படாது. இந்த காலக்கெடுவை பான் கார்டு வைத்திருப்பவர்கள் சந்திக்கத் தவறினால், 10 -இலக்க தனிப்பட்ட எண்ணெழுத்து எண் செயலற்றதாகிவிடும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த விதிக்கு சில விலக்குகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். மே 2017இல் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையில் இருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு.
- அஸ்ஸாம், மேகாலயா அல்லது ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதியில் வசிப்பவர்கள்.
- வருமான வரிச் சட்டம், 1961இன் படி குடியுரிமை இல்லாதவர்.
- முந்தைய ஆண்டில் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.
- இந்தியாவின் குடிமகன் அல்லாதவர்கள்.
பான் கார்டு - ஆதார் இணைப்பு பல வழிகளில் செயல்படுத்தலாம். வருமான வரித்துறை இணையம் மூலம், பான் கார்டை ஆதாருடன் இணைக்கலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலமும், ஆஃப்லைன் மூலமும் பான் கார்டு - ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ