பொதுமக்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக, மத்திய அரசு, 2015இல் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
18 வயதில் இருந்து 50 வயது வரை உள்ளவர்கள், எஸ்பிஐ வங்கி, தபால் அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், தானாக டெபிட்டில் சேர அல்லது ஆட்டோ டெபிட் ஆப்ஷனை தேர்வுசெய்தவர்கள், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். வங்கி கணக்குகளுக்கான KYC-யில் ஆதார் முதன்மையாக உள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதிவரை இயங்கும் 2 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் 12 மாத காலப்பகுதி புதுப்பிக்கத்தக்கது. இந்த காப்பீடு ரூ. 2 வரை ரிஸ்க் கவரேஜை வழங்குகிறது. ஏதேனும் காரணத்திற்காக காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு, மரணம் ஏற்பட்டால் 2 லட்சம் வரை கிடைக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து, ஆண்டு பிரீமியம் ரூ. 436 மற்றும் ஒவ்வொரு ஆண்டு கவரேஜ் காலத்தின் மே 31 அல்லது அதற்கு முன் சந்தாதாரரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்பட வேண்டும்.
இந்தத் திட்டம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தாலும் மற்ற அனைத்து ஆயுள் காப்பீட்டாளர்களாலும் வழங்கப்படுகிறது. அவர்கள் தேவையான ஒப்புதலுடன் ஒப்பிடக்கூடிய விதிமுறைகளில் வழங்கத் தயாராக உள்ளனர். இந்த நோக்கத்திற்காக வங்கிகளுடன் ஒத்துழைக்கிறார்கள்.
எந்தவொரு காரணத்திற்காகவும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவை உங்களால் தொடர முடியாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து வருடாந்திர ஆட்டோ டெபிட் செயல்முறையை நீங்கள் ரத்துசெய்யலாம். இதைச் செய்ய, உங்கள் கணக்கு PMJJBY திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.
தேவையான வழிமுறைகளை செய்துவிட்டு PMJJBY பிரீமியம் கட்டணத்தை நிறுத்தும்படி கோரிக்கை விடுக்கலாம். சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படாவிட்டால், உங்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பாலிசி தானாகவே ரத்து செய்யப்படும்.
மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் தேவையான நிதி இல்லாவிட்டால், பிரீமியத்தைத் தானாகப் பற்று வைப்பது சாத்தியமில்லை. இதன் விளைவாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரத்து செய்யப்படும்.
மேலும் படிக்க | ரூ. 2000 நோட் கையில் இருக்கா... இதெல்லாம் கரெக்ட்டா இருக்கானு பாருங்க - முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ