வைட்டமின் டி இல்லையென்றால் உங்கள் உடம்பில் இந்த 5 விஷயங்கள் நடக்காது

Vitamin D deficiency News Tamil : வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு தசைகள், எலும்புகள் பலவீனமாக இருக்கும். இதனை தவிர்க்க வைட்டமின் டி உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 23, 2024, 02:13 PM IST
  • வைட்டமின் டி குறைபாடு இருக்கிறதா?
  • உடம்பில் காட்டும் உடனடி அறிகுறிகள்
  • இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்
வைட்டமின் டி இல்லையென்றால் உங்கள் உடம்பில் இந்த 5 விஷயங்கள் நடக்காது title=

Vitamin D deficiency News : வைட்டமின் டி குறைபாடு இருந்தால், ஒருவர் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்வார்கள். மருத்துவர்கள் சோதித்தால் மட்டுமே இந்த குறைபாடு இருப்பது தெரியும். பலர் இதனை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிடுதால், காலப்போக்கில் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாக இருப்பதற்கு கால்சியம் தேவை. அந்த கால்சியம் சத்தை உணவில் இருந்து உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. ஒருவேளை வைட்டமின் டி ஊட்டச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால், உடலுக்கு தேவையான பாஸ்பரஸ், கால்சியம் சத்து உணவில் இருந்து உரிஞ்சப்படாமலேயே போகும். 

இதனால் பக்கவிளைவுகளை மக்கள் எதிர்கொள்ள தொடங்குகிறார்கள். வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் உடலுக்கு கிடைக்கிறது. அத்துடன் உணவு வழியாகவும் வைட்டமின் டி கிடைக்கச் செய்யலாம். மீன், முட்டையின் மஞ்சள் கருக்கள், பால் மற்றும் தானியங்கள் ஆகியவற்றில் வைட்டமின் டி ஊட்டச்சத்து இருக்கிறது. ஒவ்வொரு வயதினருக்கும் எவ்வளவு வைட்டமின் டி சத்து இருக்க வேண்டும் என்பதற்கான அளவீடு இருக்கிறது. அதன்படி, பிறப்பு முதல் 12 மாதங்கள் வரை: 400 IU; 1 முதல் 13 ஆண்டுகள் வரை: 600 IU; 14 முதல் 18 ஆண்டுகள் வரை: 600 IU; 19 முதல் 70 ஆண்டுகள் வரை: 600 IU; 71 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 800 IU மற்றும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு 600 IU என்ற அளவில் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | காலை அல்லது இரவு? முகத்திற்கு ஃபேஸ் வாஷ் எப்போது பயன்படுத்த வேண்டும்?

உங்களுக்கு ஏன் வைட்டமின் டி தேவை?

கால்சியம் உறிஞ்சுதல்

வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது போதுமான அளவில் இல்லாதபோது, உணவில் இருந்து கால்சியத்தை உடலால் உறிஞ்ச முடியாது. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கியம். குறைந்த வைட்டமின் டி அளவு, எலும்பு வலி, எலும்பு முறிவு, தசை வலி மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது.

எலும்பு வளர்ச்சி

எலும்பு வளர்ச்சியில் வைட்டமின் டி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது, இது எலும்பு உருவாக்கம் மற்றும் மறுஉருவாக்கத்தின் சீரான செயல்முறையை உறுதி செய்கிறது, இது எலும்பு ஆரோக்கியம் மற்றும் அடர்த்தியை பராமரிப்பதில் முக்கியமானது.

தசை செயல்பாடு

எலும்பு ஆரோக்கியமும் தசைச் செயல்பாடும் நெருங்கிய தொடர்புடையவை. இரண்டுக்கும் வைட்டமின் டி அவசியம். குறிப்பாக வயதானவர்களுக்கு, இது தசை வலிமையை பராமரிப்பதன் மூலம் எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கிறது. வலுவான தசைகள் எலும்புகளை பாதுகாப்பதன் மூலம் எலும்பு ஆரோக்கியமும் மேம்படுகிறது.

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் கோளாறு எலும்புகள் பலவீனமடைவதற்கும் எளிதில் முறிவதற்கும் காரணமாகிறது. உடையக்கூடிய எலும்புகளுக்கு முக்கிய காரணம் போதுமான வைட்டமின் டி அளவுகள் இல்லாததே ஆகும். எனவே வைட்டமின் டி ஊட்டச்சத்தில் கவனம் செலுத்தினால் இப்பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | ரன்னிங் இல்லை... ஜிம் இல்லை... 21 நாள்களில் உடல் எடையை குறைந்த மாதவன் - என்ன மேஜிக் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News