UPI கட்டணங்களை அதிகம் சார்ந்து இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும்.
பல நேரங்களில், நாம் UPI கட்டணம் (UPI Payment) செலுத்த விரும்பும் சூழ்நிலைகளில், இணைய வேகம் மிகவும் மெதுவாக இருப்பதாலோ அல்லது மோசமான நெட்வொர்க் காரணமாகவோ, அது நடக்காமல் போகலாம். எனினும், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு உள்ளது. இது UPI பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக வந்துள்ளது. பயனர்கள் தங்கள் ஃபோன்கள் மூலமாகவும் ஆஃப்லைனில் பணம் செலுத்த முடியும்.
எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பணம் செலுத்துவதற்கு குறைந்தபட்ச நெட்வொர்க் கவரேஜ் உங்களுக்கு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்!! உங்கள் மொபைலில் *99# USSD குறியீட்டை டயல் செய்தால் போதும். உங்கள் தொலைபேசியின் டயலரைத் திறந்து *99# ஐ உள்ளிட்டு கால் பட்டனை டேப் செய்யவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து *99# டயல் செய்தவுடன், உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுப்பதற்கான பாப்-அப் கிடைக்கும். வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டதும், பட்டியலில் இருந்து வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ALSO READ | GSTR Filing: வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி, இந்த காலக்கெடுவை நீட்டித்தது அரசு
இப்போது, உங்கள் UPI பின்னை உருவாக்கி, உங்கள் டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கங்களை உள்ளிடவும். பின்னர் உங்கள் டெபிட் கார்டின் காலாவதி தேதியை உள்ளிடவும். உங்களின் ஆறு இலக்க UPI பின்னை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும். உங்கள் UPI பின் செட் செய்யப்படும்.
இப்போது மீண்டும் *99# டயல் செய்தால், பல விருப்பங்களைக் கொண்ட பட்டியலைக் காண்பீர்கள். நீங்கள் பணம் அனுப்ப வேண்டுமானால் எண் 1ஐ டைப் செய்து send என்பதைத் டேப் செய்யவும். பணம் பெறுபவரிடமிருந்து உங்களிடம் உள்ள தகவலைத் தேர்ந்தெடுத்து, எண்ணை டைப் செய்து, send என்பதை டேப் செய்யவும்.
இப்போது, உங்கள் UPI கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு send என்பதைத் டேப் செய்யவும். பிறகு, தொகையை உள்ளிட்டு அனுப்பவும். கட்டணம் செலுத்துவதற்கான குறிப்பை உள்ளிடவும். பரிவர்த்தனையை (Money Transaction) முடிக்க உங்கள் UPI பின்னை உள்ளிடவும். இந்த வகையில் உங்கள் UPI பரிவர்த்தனை இணையம் இல்லாமலேயே நிறைவடையும்.
ALSO READ | செல்போன் தொலைந்து போனால் UPI விவரங்களை பாதுகாப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR