முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி?

IRCTC Train Tickets: பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட தங்கள் ரயில் டிக்கெட்டுகளை மற்றொரு பயணிக்கு எளிதாக மாற்றலாம்.  இந்திய ரயில்வே அதற்கான வழிகளை கூறி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2023, 09:14 AM IST
  • இந்திய ரயில்வே பல வசதிகளை வழங்கி வருகிறது.
  • முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை மாற்ற முடியும்.
  • வேறொருவரை அதே டிக்கெட்டில் மாற்றி கொள்ளலாம்.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி? title=

சில அவசர வேலைகள் அல்லது கடைசி நிமிட திட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்திய ரயில்வே பயணிகள் பல முறை புக் செய்யப்பட்ட டிக்கெட்தில் பயணம் செய்ய தவறிவிடுகிறார்கள். அந்த டிக்கெட்டை வீணடிக்க விடாமல், இந்திய ரயில்வே இப்போது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை தேவைப்படும் மற்றொரு சக பயணிக்கு மாற்றுவதற்கான வழிகளை வழங்குகிறது. இருப்பினும், பயணி ஒருவர் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை தனது குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே மாற்ற முடியும்.

மேலும் படிக்க | Penalty: வங்கிகளே சட்டத்தை மதிக்கவில்லை என்றால்? RBI கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கும்

இந்த வசதியை எவ்வாறு பெறுவது?

இந்த வசதியை பெற, அரசு ஊழியர்கள் உட்பட பயணிகள், ரயில் புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன், கோரிக்கையை வைக்க வேண்டும். ஐஆர்சிடிசி போர்ட்டலில் கோரிக்கை வைக்கப்பட்ட பிறகு, டிக்கெட் புதிய பயணிக்கு மாற்றப்படும்.  பயணம் செய்பவர் அரசுப் பணியாளராக இருந்து, திருவிழா, திருமண நிகழ்வு அல்லது தனிப்பட்ட பிரச்னை ஏதேனும் இருந்தால், புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் பரிமாற்றக் கோரிக்கையை எழுப்ப வேண்டும். அரசு ஊழியர்களைத் தவிர, என்சிசி விண்ணப்பதாரர்களும் டிக்கெட் பரிமாற்ற சேவையின் பலன்களைப் பெறலாம். மாற்று டிக்கெட்டை பெரும் பயணிகள், பயணத்தின் போது சரிபார்ப்புக்காக செல்லுபடியாகும் அரசு அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை எவ்வாறு மாற்றுவது? 

- முதலில் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.
- பின்னர், அருகிலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று முன்பதிவு கவுண்டருக்குச் செல்ல வேண்டும்.
- பின்னர், நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
- உங்கள் அடையாளச் சான்றின் நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
- பின்னர், அனைத்து ஆவணங்களுடன் கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு, உங்கள் பயணச்சீட்டு உங்களுக்குப் பதிலாக பயணிக்கும் நபருக்கு எளிதாக மாற்றப்படும்.

உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டைப் பெறுவதற்கான வழிகள்

உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், புறப்படும் தேதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ முன்பதிவு செய்யவும். கணினி, லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் போன்ற உங்களிடம் இருக்கும் பல சாதனங்களையும் பயன்படுத்தி விரைவாக டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்.  வேகமான இணைய இணைப்பு உங்கள் டிக்கெட்டை விரைவாகப் பதிவுசெய்ய உதவும்.  எனவே டிக்கெட்டை முன்பதிவு செய்யத் தொடங்கும் முன், உங்களிடம் நல்ல இணைய இணைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​மேல் பெர்த்களைத் தேர்வுசெய்ய முயற்சி செய்யுங்கள்.  முதல் முயற்சியிலேயே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்து உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுங்கள்.

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News