Active lifestyle habits : சோம்பேறித் தனம் உங்களின் உடலை சோர்வாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், மனதின் ஆற்றலையும் சேர்த்தே சோர்வாக்கிவிடுகிறது. இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்க்கையில் நல்ல வழியில் இருந்து திசை மாறிச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. ஏதாவது ஓர் இடத்தில் நின்று கொண்டு இந்த சோம்பேறித் தனத்தை அடையாளம் கண்டு கொண்டு அதில் இருந்து மீண்டு வருவது எப்படி என யோசித்தால், இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும். சுறுசுறுப்பாக இருப்பது என்பது ஒரு வாழ்க்கை முறை. அதற்குள் உங்களை நீங்கள் புகுத்திக் கொண்டால் மட்டுமே உடல், மனம் என இரண்டும் வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருக்கும்.
சுறுசுறுப்பாக இருந்தால் என்ன கிடைக்கும்?
நீங்கள் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால் உடல் பருமன், நீரிழிவு நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற ஆபத்தான வாழ்க்கையை புரட்டிப்போடக்கூடிய நோய்கள் எல்லாம் வராது. எலும்பு, இதயம், தசைகள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். நீண்ட நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். அதுவே இந்த வாழ்க்கையின் ஆகச்சிறந்த வரம் என்று நோய்வாய்பட்டவர்களை கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள்.
சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?
சுறுசுறுப்பாக இருப்பது என்பது ஏற்கனவே கூறியதுபோல் அது ஒரு வாழ்க்கை முறை. காலையில் இருந்து மாலை வரை தூக்கத்தில் இருந்து விழிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்தால் உங்களை நீங்கள் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | உங்கள் வயதிற்கு ஏற்ப தினசரி எவ்வளவு தூக்கம் அவசியம் தேவை?
1. உடற்பயிற்சி
காலையில் முதலில் நேரமாக எழ வேண்டும். பல் துலக்கி, காலைக்கடன்களை முடித்தவுடன் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உங்களுக்கு ஏற்ற பயிற்சிகளை குறைந்தது ஒரு மணி நேரத்துக்கும் குறைவில்லாமல் செய்யவும். மாலையில் முடிந்தால் ஒரு 10 நிமிடங்களாவது பயிற்சி செய்யுங்கள். ஈஸியான மற்றும் கடினமான உடற்பயிற்சிகள் என இரண்டையும் பயிற்சி செய்யுங்கள். படிப்படியாக செய்வது நல்லது.
2. உணவு முறை
சோர்வாக இருப்பதற்கு மற்றொரு காரணம் தவறான உணவுப் பழக்கம். ஆரோக்கியமான உணவுகளை உங்கள் டையட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகள், பழங்கள், கூழ், ட்ரைப்ரூட்ஸ் ஆகியவற்றை தினமும் சாப்பிடுங்கள். மோசமான உணவுகளான பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள். அதிக எண்ணெய் உணவுகள், பொறித்த உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.
3. வேலை
உங்களுக்கான வேலையை சரிவர செய்யவும். 8 மணி நேரம் என்றால் வேலையில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். உட்கார்ந்தே செய்யக்கூடிய வேலை என்றால் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது எழுந்து சில நிமிடங்கள் நடக்கவும். உங்களுக்கு பிடித்தமான வேலை செய்யுங்கள். அதில் மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்த இடங்களுக்கு செல்லுங்கள்.
4. பணம்
வாழ்க்கையில் பணம் இன்றியமையாதது. அதனை சம்பாதிக்கும் வழிகளை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் மூன்று வழிகளில் பணம் வரும் வழிகளை உருவாக்கவும்.
5. தியானம்
உங்களை நீங்கள் எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்காக தியானம், யோகா மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களுக்கும் போதுமான நேரத்தை செலவிடுங்கள். மன அழுத்தம் ஆபத்தானது என்பதால் அது வரும் வழிகளை எல்லாம் கண்டுபிடித்து அடைத்துவிடுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புங்கள். அதற்கான சூழலை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க | Samantha : காதலிக்கப்போறீங்களா? சமந்தா கொடுத்த ரிலேஷன்ஷிப் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ