கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டு மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டது. இருப்பினும் வைரஸால் சந்தைகளில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமானால் 2021-ம் ஆண்டு பண ரீதியான சந்தைக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. Mutual fund முதலீட்டாளர்கள் 2021 ஆம் ஆண்டில் சந்தைகளில் செய்யப்பட்ட முதலீடுகள் நல்ல லாபம் பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். 30-பங்கு என்ற அளவில் 2021ல் முதலீட்டாளர்களுக்கு ₹ 72 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
ALSO READ | Amazon கிரேட் இண்டியா சேல் ஒரு நாள் முன்னதாகவே தொடங்கும் காரணம் இதுதான்!
BSE சென்செக்ஸ் முதன்முறையாக 50,000-ஐ தாண்டி சாதனை படைத்து இருக்கிறது, மேலும் இது IPOக்களின் பிளாக்பஸ்டர் ஆண்டாக கருதப்படுகிறது. நாம் தற்போது அடியெடுத்து வைத்திருக்கும் இந்த 2022ல் அதிக பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கு ஆலோசகர்கள் 7 விதமான வழிமுறைகள் பற்றிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
1) கிரிப்டோகரன்சிகள் :
டிஜிட்டல் நாணயங்களான கிரிப்டோகரன்சிகள் தற்போது பிரபலமான வருவாயை ஈட்டும் வழிமுறைகளில் ஒன்று. இவை பல பெரிய முதலீடுகளில் ஒன்று என்பதை நிரூபித்துள்ளன. Bitcoin, Ethereum, Dogecoin போன்ற கிரிப்டோகரன்சிகள் சமீப காலமாக பெரும் வருமானத்தை அளித்துள்ளதாக மனோஜ் டால்மியாவின் நிறுவனர் கூறியுள்ளார்.
2) பங்குகள் :
2022ம் 5 உயர் பங்குகளை Analysis-ShareIndia தலைவர் டாக்டர் ரவி சிங் பரிந்துரை செய்துள்ளார். அவை PSU lender State Financial institution of India (SBI), GAIL, HDFC நிதி நிறுவனம், TCS மற்றும் ONGC ஆகும்.
3) ரியல் எஸ்டேட்
இது இன்றளவு வரை நீடிக்கக்கூடிய பசுமையான முதலீடு முறையாகும். இவை அதிகமாக நிதி வளர்ச்சிக்கு உதவும் என்று மனோஜ் டால்மியா நிறுவனர் கூறியுள்ளார்.
4) இணைந்து பணிசெய்யக்கூடிய பகுதிகள்
கொரோனா, வணிகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதன் காரணமாக சொத்துக்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் முதலீடுகளை சரியான முறையில் செய்ய வேண்டுமெனில் வீழ்ச்சியடைந்தவற்றை ஷாப்பிங் செய்து, அதை இணை பணிபுரியும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்று Avanta India-வின் நிர்வாக அதிகாரி நகுல் மாத்தூர் கூறியுள்ளார்.
5) விர்ச்சுவல் அஸெஸ்ட்ஸ்:
டிஜிட்டல் உலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் மெட்டாவேர்ஸ் டிஜிட்டல் உலகத்தில் டிஜிட்டல் சொத்துக்களை வாங்க உதவிபுரிந்தது. இதன்மூலம் மக்கள் ஆயிரக்கணக்கில் நிலங்கள், சிலைகள், பூங்காக்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம் என்று \ மனோஜ் டால்மியா நிறுவனர் கூறுகிறார்.
6) மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) :
SCSS என்பது மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகும், இது போதுமான வருவாயை வழங்குகிறது. குறைந்த தொகையில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்று ஷேர் இந்தியாவின் துணைத் தலைவர் டாக்டர் ரவி சிங் கூறியுள்ளார்.
7) தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) :
NPS என்பது ஓய்வடைந்த அனைவருக்கும் வருவாய் பெறக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் விருப்பம் உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம், இது சிறந்த முறையில் உங்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் என்று ஷேர் இந்தியாவின் துணைத் தலைவர் டாக்டர் ரவி சிங் கூறியுள்ளார்.
ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, முழு கணக்கீடு இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR