How To Confess Your Love : காதல் வராத மனிதரும் இவ்வுலகில் இருக்கின்றனரா? இருவர் காதலித்தால் மட்டும்தான் அது காதலா என்ன? நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு தலை காதல் கூட இருக்கலாம். அந்த ஒரு தலை காதல் எப்போதோ ஏதோ ஒரு நிகழ்வில் பார்த்த ஒரு நபர் மீது இருக்கலாம். அல்லது, நம்முடன் நண்பனாக/தோழியாக பழகும் ஒருவர் மீதும் இருக்கலாம். பலர் தங்களின் காதலை, தனக்கு பிடித்த நபரிடம் எப்படி கூறுவது என்று தெரியாமல் விழித்து கொண்டிருப்பர். “ஐ லவ் யூ” என்று சொல்லாமலேயே ஒருவருக்கு உங்களது காதலை புரிய வைப்பது எப்படி தெரியுமா? இங்கு அது குறித்து பார்க்கலாம்.
பேச்சை கேட்பது:
பேச்சை கேட்பது என்றால், உங்களுக்கு பிடித்த நபரின் பேச்சை கேட்டு நடப்பது இல்லை. அவர் கூறும் விஷயங்களை எந்த வித கவனச்சிதறலும் இன்றி முழுமையாக கேட்பது. அவர்கள் எப்படி பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். உண்மையாகவே அவர்கள் பேசும் விஷயத்தின் மீது கவனம் கொள்ள வேண்டும். இதை செய்தால், அவர்களுக்கே ஒரு நேரத்தில், உண்மையாகவே இவருக்கு நம் மீது அன்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்வர்.
நேரம் செலவிடுவது:
இருவரும் ஒன்றாக நேரம் செலவிட வேண்டும். அது ஒரு போர் அடிக்கும் மதிய வேளையில் ஒன்றும் செய்யாமல் இருவரும் அமர்ந்து கொள்வதாக இருக்கலாம். அல்லது, இருவருக்கும் பிடித்த படம் பார்ப்பதாக இருக்கலாம். இருவருமே நன்றாக நேரம் செலவிட நீங்கள் ஆர்வம் காட்டுவதால் அவர்களுக்கே உங்கள் உணர்வுகள் புரியலாம்.
பிடித்த விஷயங்களை செய்வது:
உங்களுக்கு பிடித்தவருக்கு பிடித்த விஷயங்களை வாங்கி தருவது, கடிதம் எழுதி கொடுப்பது, அவர்களை நினைவுப்படுத்தும் பொருட்களை அவர்களுக்கு வாங்கி கொடுப்பது, குறுந்தகவலக்கு ரிப்ளை செய்ய நேரமானால், மன்னிப்பு கேட்பது என அனைத்துமே அவர்களை ஈர்க்கும். ஆனால், அவர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விஷயங்களை நீங்கள் செய்ய கூடாது. அவர்கள், எப்போதோ சொன்ன சின்ன சின்ன விஷயங்களை கூட நினைவில் வைத்து எப்போதாவது அதை நினைவுப்படுத்துவது உங்கள் காதலை பெரிதாக தெரிவிக்கும்.
சேவை:
உங்களுக்கு பிடித்தவரின் வாழ்வில் ஏதேனும் பிரச்சனை எனும் போது அவர் கூடவே நிற்பது, அவர்களுக்கு ஒன்று என்றால் நீங்கள் துடிதுடித்து போவது என அனைத்துமே ஒரு வகையான சேவைதான். இது போன்ற விஷயங்களை நீங்கள் தவறாமல் செய்தால் கண்டிப்பாக அவர் மீது நீங்கள் அதிக அக்கறை வைத்துள்ளீர்கள் என்பதை அவர் தெரிந்து கொள்வார்.
தொடுதல்:
தொடுதல் என்றால், காமத்தால் தூண்டப்பட்டு தொடுவது மட்டுமல்ல. அவருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்வதில் இருந்து, சாலையை கடக்கையில் அவரது கைகளை பிடித்துக்கொள்வது வரை, அனைத்துமே அன்பான தொடுதல்களாக இருந்தால் அவர்கள் உங்கள் அன்பை தெரிந்து கொள்வர்.
மதிப்பு:
உங்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமன்றி, உங்களை சுற்றி இருக்கும் அனைவருக்குமே சமமாக மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு சிலர், தனக்கு பிடித்த நபர்களுக்கு அல்லது தான் யாரிடம் அதிகமாக ஈர்க்கப்பட்டிருக்கிறோமோ அவர்களுக்கு மட்டும் அதிகமாக மரியாதை கொடுப்பர். ஆனால், இது போன்ற குணாதிசயங்கள் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது. எனவே, அனைவரையும் சரிசமமாக நடத்த வேண்டும். மேலும், உங்களுக்கு பிடித்த நபரை எந்த இடத்திலும் மரியாதை குறைவாக நடத்திவிட கூடாது.
இறுதியில், யாருக்கும் ஒருவரின் மனதை இன்னொருவருக்கு படிக்க தெரியாது. அதனால், உங்களுக்கு ஒருவர் மீது காதல் இருந்து, அதை நீங்கள் என்ன செய்தும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் அதை வாயை திறந்து கூறிவிடுங்கள். இதனால், உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். அவர்களுக்கு உங்கள் மீது எது போன்ற உணர்வு இருக்கிறது என்பதும் தெரிந்து விடும்.
மேலும் படிக்க | காதலிக்கப் போறீங்களா... அப்போ இந்த 5 பழக்கங்களை தூக்கி வீசுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ