மன நலனையும் உடல் நலனையும் நன்றாக பார்த்துக்கொள்வது கண்டிப்பாக நமது வாழ்க்கையை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றும் என மருத்துவர்களால் சான்றளிக்கப்படுகிறது. ஒரு மனிதர் உடல் மற்றும் மனதளவில் ஹெல்தியாக இருந்தால் வாழ்வில் எந்த பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கான முயற்சிகளை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என பலருக்கும் சந்தேகங்கள் இருக்கலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் எளிமையான டிப்ஸை பயன்படுத்தி வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கலாம்.
1.நம்பிக்கையை வளர்த்தல்:
Spirituality என்பதற்கு தமிழில் ஆன்மீகம், தெய்வீகம் என்று பொருள் படும். ஆனால், அதற்கான உண்மையான அர்த்தம் எந்த தெய்வத்திடமோ, ஆன்மீகம் தொடர்பான விஷயங்களிலோ இல்லை. இது, நமக்குள் நாமே பேசிக்கொள்ளும் முறையையும், நம்மையும் தாண்டி இந்த உலகில் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புவதையும் குறிப்பதாக சிலர் கூறுகின்றனர். அதை நம்புவதால் நமக்கு உணர்வு ரீதியாக பலம் கிடைக்கும் என்றும், இதை யோகாசனங்கள், தியானம் செய்வது, பிரார்த்தனைகள் போன்றவற்றால் அடையலாம். இது, வாழ்வில் கடினமான தருணங்களை கடக்க உதவும்.
2.பிறருடன் பழகுவது:
மனிதர்களை சமூக மிருகங்கள் என கூறுவர். காரணம், மனிதர்களாகிய நாம் கூட்டம் கூட்டமாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது. நாம் தனிமையில் வாழ்ந்தாம் மகிழ்ச்சியை தேடுவது கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிலருக்கு நிறைய பேர் இருக்கும் இடத்திற்கு போக கூச்சமாக இருக்கும், சிலருக்கு பயமாக இருக்கும், இன்னும் சிலருக்கும் அது பிடிக்கவே பிடிக்காது. ஆனால், சமூகத்துடன் பழகி அவர்களுடன் பல விஷயங்களை ஒன்றாக செய்வதால் நெருக்கடியான சமயங்களை விரைவில் கடக்க உதவும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, நாம் வெற்றியடைந்தாலும் அதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள நான்கு பேர் தேவைப்படுவதால் தனிமையையே நிரந்தரமாக கொண்டிருக்காமல் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு சென்று வித விதமான வாழ்வியல்களை கொண்ட மனிதர்களை சந்திப்பது மனதை மகிழ்ச்சி அடைய செய்யும்.
மேலும் படிக்க | உஷார் மக்களே..! அதீத உடற்பயிற்சியால் ‘இந்த’ ஆபத்துகள் வரும்!
3.நன்றியுணர்வு:
மனிதர்கள் பல சமயங்களில் கையில் இருக்கும் விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அது குறித்தே குறை கூறுவதுண்டு. இதனால், பல சமயங்களில் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போகிறது. இதை தவிர்க்க, மன நல மருத்துவர்கள் சில வழிகளை கூறுகின்றனர். தினமும் நமக்கு கிடைத்திருக்கும் விஷயங்களை நினைத்து அதற்காக நன்றியுணர்வுடன் இருப்பதும் அவற்றை பாராட்டுவதும் வாழ்வில் மகிழ்ச்சியை தேடித்தருமாம். இதனால், வாழ்வில் நன்றாக இல்லை என்று நீங்கள் நினைக்கும் விஷயங்களை தாண்டி, பாசிடிவான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள்.
4.சமூக வலைதளங்களை குறைவாக உபயோகித்தல்:
உலகின் தற்போதைய சூழலில், டிஜிட்டல் உலகில் இருந்து விலகியிருப்பது முடியாத காரியமாக இருந்து விடுகிறது. ஆனாலும் ஒரு நாளில் பல மணி நேரங்கள் அதிலேயே மூழ்கி கிடப்பது நமது மனதை பாதிக்கும் என மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, நீங்கள் சமூக வலைதளங்களில் செலவு செய்யும் நேரத்தினை உங்களுக்கு பிடித்த வேறு ஏதேனும் விஷயத்தில் உபயோகிக்கலாம். இதனால் பல நல்ல திறன்களை கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
5.நிகழ்வில் இருப்பது:
‘இப்படி நிகழ்ந்து விட்டதே..அப்படி நடந்து விடுமோ..’ என யோசித்து கடந்த காலத்திலும் எதிர் காலத்திலும் மாறி மாறி நமது நிகழ்காலத்தை செலவு செய்வது மன நலனுக்கு நல்லதல்ல. அப்போது எது நடந்தததோ அது நன்மைக்காகவே நடந்து விட்டது என்ற எண்ணத்தை மனதில் விதைத்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நம் கையில் இருப்பதை மட்டும்தான் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் புரிந்து கொண்டு முடிந்தவரை உங்கள் கண் முன் நிகழ்பவற்றில் மட்டும் வாழ வேண்டும். இதனால் உங்களது மகிழ்ச்சி கெடாமல் பார்த்துக்கொள்ளலாம்.
6.தீய பழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாம்:
சிலர் மகிழ்ச்சிக்காகவோ, பழக்கமாகவோ மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். இது மகிழ்ச்சியை கொடுக்காது, மாறாக சிற்றின்பத்தை மட்டுமே கொடுக்கும். உடல் நலன் கெட்டுப்போவது மட்டுமன்றி மன நலனும் இதனால் சீரழிந்து விடும். ஆகையால், வாழ்வில் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும், இது போன்ற தீய பழக்கங்களுக்கு மட்டும் அடிமையாகி விடாதீர்கள்.
7.நல்ல வாழ்க்கை முறை:
இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பல்வேறு வாழ்க்கை முறை பழக்கங்களை உள்ளடக்கியதாகும். அவர்களில் சிலர் நன்கு ஹெல்தியான உணவு டயட்டை பின்பற்றுதல், உடல் நலனில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றால் மகிழ்ச்சி உண்டாகும். இவர்கள், தினமும் எட்டு மணிநேரம் தரமான தூக்கத்தைப் பெறுகிறார்கள், மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாலுஜ்ம் செரொடின் என்ற ஹார்மோன் சுரக்கும். இதனால் உடலும் மனதும் மகிழ்ச்சியான நிலையை அடையும். இவை அனைத்தும் நீங்கள் தங்குவதற்கும் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுவாக இருக்க உதவுகின்றன, குறிப்பாக விஷயங்கள் மன அழுத்தமாக இருக்கும்போது.
மேலும் படிக்க | இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் இருக்க..‘இந்த’ 5 காய்கறிகளை சாப்பிடுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ