How To Apply Voter ID Online: 18 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமக்களுக்குமே, தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. அவர்கள், தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மக்கள் பங்குதான் பெரும் பங்கு என்பதை உணர்த்தும் வகையில், வாக்கெடுப்புகள் நடத்தப்படுகிறது. இப்படி வாக்களிப்பதற்கு, அடிப்படை ஆதாரமாக தேவைப்படுவது, வாக்காளர் அடையாள அட்டை. ஆனால், இது இல்லாமல் பலரால் வாக்களிக்க முடியாமல் பாேகிறது. இதை வாங்குவதற்கு பலர் அவர்கள் வீட்டருகே முகாம் அமைக்கும் வரை காத்துக்கொண்டுள்ளனர்.
கடந்த காலத்தில், வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவது நீண்ட வரிசையில் காத்திருந்து சிக்கலான படிவங்களை நிரப்பும் கட்டாம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் அணுகக்கூடியதாகவும் வசதியாகவும் மாறியுள்ளது. இதற்கு நாம் நவீன டிஜிட்டல் உலகிற்குதான் நன்றி கூற வேண்டும்.
அரசாங்கம் இதற்கென்று தனியாக சில இணையதளங்களை உருவாக்கி உள்ளது. இவை விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கியுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையை வீட்டிலிருந்தே பெறுவதற்கு இந்த தளங்கள் அனுமதி அளிக்கின்றன. இதை ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பு மற்றும் சரியான அடையாள ஆவணங்கள் மட்டுமே உங்களுக்குத் தேவை.
மேலும் படிக்க | Google Pay மூலம் கடன் பெறுவது எப்படி? எளிய வழிகள்!
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை..
>இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) முகப்புப் பக்கமான வாக்காளர் அடையாளப் பதிவுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழையவும்.
>வாக்காளர் பட்டியல்கள் மற்றும் நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணைகள் உட்பட, இந்தியாவில் தேர்தல் செயல்முறை பற்றி தேவையான அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் உள்ளன. இது வாக்காளர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வாக்களிக்க பதிவு செய்வதற்கான பல்வேறு விண்ணப்பப் படிவங்களையும் கொண்டுள்ளது.
>பயனாளருக்கு தேவைப்படும் சேவையின் அடிப்படையில் வெவ்வேறு படிவங்கள் உள்ளன. இந்தப் படிவங்களில் பெயர் மாற்றம், இந்தியாவில் வசிக்கும் குடிமக்களுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களுக்கான படிவங்கள் ஆகியவை அடங்கும்.
> புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க, 6வது படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
>6வது படிவத்தை கண்டுபிடிக்க தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தைப் பார்க்க வேண்டும். "படிவங்கள்" பிரிவின் கீழ், படிவம் 6 ஐ பதிவிறக்கம் செய்யலாம். இது, இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
தேவைப்படும் ஆவணங்கள்..
>ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
>பிறப்பு சான்றிதழ், பேன் கார்ட், பள்ளி சான்றிதழ் ஆகியவை அடையாளச் சான்றாக தேவைப்படும்.
>முகவரி சான்றுக்காக குடும்ப அட்டை, , ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை தேவைப்படலாம்.
வாக்காளர் அடையாள அட்டை வாங்குபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதி..
>இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
>விண்ணப்பதாரருக்கு நிரந்தர குடியிருப்பு முகவரி இருக்க வேண்டும்
>விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | இவ்வளவு கம்மி விலையில் துபாய்க்கு செல்லலாமா, IRCTC அசத்தலான டூர் பேக்கேஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ